அறிவியல் & தொழில்நுட்பம்

ஜப்பானில் நகரும் குப்பைத் தொட்டிகள் அறிமுகம்

ஜப்பானின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமான டோக்கியோவில், துப்புரவுப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில், நகரும் ரோபோ குப்பைத் தொட்டிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

தினமும் 27 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் கடந்து செல்லும் ஷின்ஜுகு நிலையத்தில், மூன்று தானியங்கி குப்பைத் தொட்டிகள் சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

ஒரு மீட்டருக்கும் சற்று அதிகமான உயரமும், வினாடிக்கு 20 சென்டிமீட்டர் என்ற வேகமும் கொண்ட இந்த வகையான குப்பை தொட்டிகள் பயணிகளைச் சுற்றி விரைவாக நின்றுவிடும் திறன் கொண்டவை.

செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமான இந்த சோதனை திட்டம் நவம்பர் 20ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும்.

வார நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பாவனையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய குப்பைத் தொட்டிகள் ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல் கைமுறையாகக் சுத்தம் செய்யப்படுகின்றன.

ஆனால் இந்த ரோபோக்கள், டிக்கெட் வாயில்களுக்கு இடையே முன் திட்டமிடப்பட்ட வட்டப் பாதைகளில் பயணித்து, பொதுக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரிக்கின்றன. அவை நிரம்பியதும், தானாகவே சேகரிப்பு இடத்திற்குத் திரும்புகின்றன.

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்