வாழ்வியல்

புற்றுநோய், தொற்று நோய்களுக்கான புதிய மருந்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

mRNA சிகிச்சைகள் மூலம் செல்களுக்குள் அதிக புரதத்தை உற்பத்தி செய்வதற்கான ஒரு சாத்தியமான வழியைக் கண்டறிந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் விஞ்ஞானிகள் Johns Hopkins Medicine,  தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுப்பிடிப்பானது புற்றுநோய், தொற்று நோய்கள் மற்றும் தன்னுடல் தாக்குநோய்களுக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், அசிடைல்சைடிடின் அல்லது ac4C எனப்படும் இயற்கையாக நிகழும் ஒரு RNA மாற்றத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

170-க்கும் மேற்பட்ட அறியப்பட்ட RNA மாற்றங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் ஒரு சிறிய துணைக்குழு மட்டுமே mRNA சிகிச்சை நோக்கங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று  விஞ்ஞானி பின் வூ கூறியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் மற்றும் அதன் மூலம் சாதகமான பலன் கிடைக்குமானால், தொற்று நோய், புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்குநோய்களுக்கு எதிராகப் போராடும் தடுப்பூசிகளை உருவாக்க வழியமைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான