ஐரோப்பா செய்தி

24 மணி நேரத்தில் 170 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா!

பக்முட் நகரில் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய படையினர் கடந்த 24 மணி நேரத்தில் 170 ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல்களை உக்ரைன் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பிராந்தியங்களில் 14 ரொக்கட் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அமைச்சம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு போர் ட்ரோன்கள், மற்றும் 58 சால்வோ ரொக்கெட் தாக்குதல்கள் உட்பட 21 வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் உள்ள பகுதிகளில் உக்ரைனின் வான் பாதுகாப்பு 16 தாக்குதல்களை நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி