இந்தியா செய்தி

இந்தியாவில் மிக நீண்டகாலம் பதவி வகித்த பிரதமர்: சாதனை படைக்கிறார் மோடி!

  • June 4, 2026
  • 0 Comments

இந்தியா வரலாற்றிலேயே தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற அரசியல் சாதனையை பிரதமர் மோடி படைக்கவுள்ளார். இந்தியாவின் பிரதமராக 2014 மே 26ஆம் திகதி நரேந்திர மோடி பதவியேற்றார். அன்று முதல் இன்றுவரை மக்கள் ஆணையுடன் பதவியில் நீடிக்கின்றார். இந்நிலையில் பதவியில் எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி தொடர்ச்சியாக 4,399 நாட்களை பிரதமர் பதவியில் அவர் நிறைவு செய்யவுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1952 மே […]

இலங்கை

முதியோர் இல்ல தீவிபத்து – மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

ஹொரணை முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் ஆறு பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்றைய தினம் தீவிபத்து தொடர்பான நீதான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இச்சம்பவம் நடந்த நேரத்தில் முதியோர் இல்லத்தில் 71 பேர் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் 50 இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும்  இராணுவத்தினரின் உதவியுடன் மற்றுமொரு முதியோர் இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி

எழுச்சி பாடல்: கிளிநொச்சி சொல்லிசை கலைஞருக்கு விளக்கமறியல்!

  • June 4, 2026
  • 0 Comments

எழுச்சி பாடல்களைப் பாடி, சமூக ஊடங்களில் பதிவிட்ட  கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முனைவதாக அவர்மீது காவல்துறையால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் ஆலய திருவிழாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில்,  கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான சங்கீதன், பக்தி மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடியிருந்தார். அதனையடுத்து, இசை நிகழ்வில்  தான் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி […]

இலங்கை செய்தி

இலங்கையில் அடை மழை: 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் வவுனியா உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழை, கடும் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக 4 ஆயிரத்து 291 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 4 வீடுகள் முழுமையாகவும், 973 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், இன்று காலை ஆட்டோமீது […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டன் ராணுவ இரகசியங்களை குறிவைக்கும் சீனா! உளவு பிரிவு எச்சரிக்கை!

  • June 4, 2026
  • 0 Comments

பிரிட்டன் அரசாங்கம் மற்றும் இராணுவ அதிகாரிகளை இலக்கு வைத்து, LinkedIn போன்ற வேலைவாய்ப்பு இணையத்தளங்கள் ஊடாக சீன உளவாளிகள் இரகசியத் தகவல்களைத் திரட்ட முயன்று வருவதாக MI5 எச்சரித்துள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பைவ் ஐஸ்’ (Five Eyes) உளவு அமைப்புகளின் கூட்டமைப்பு இது தொடர்பான எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீன இராணுவ உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள், தனியார் நிறுவனங்கள் அல்லது சிந்தனைக் குழுக்களின் (Thinktanks) பணியாளர்கள் போல […]

இலங்கை

முழு நாடும் கடன் பொறிக்குள் சிக்கியுள்ளது! விமல் வீரவன்ச காட்டம்!!

  • June 4, 2026
  • 0 Comments

முழு நாடும் கடன் பொறிக்குள் சிக்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் சுமார் 3 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்காக ஒட்டுமொத்த மக்களும் இன்று நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். 2027 ஆம் ஆண்டுடன் ஐ.எம்.எஃபின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டம் நிறைவடையவுள்ளது. அதன் பின்னர் பொருளாதார நடவடிக்கைகளை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது […]

அரசியல் இலங்கை செய்தி

கோட்டாபய குறிவைப்பு: பதறுகிறது மொட்டு கட்சி!

  • June 4, 2026
  • 0 Comments

“கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமாகும் என காண்பிப்பதற்கு சிஐடி சதித்திட்டம் தீட்டிவருகின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாம் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கவில்லை. சிஐடியின் (குற்றப் புலனாய்வு திணைக்களம்) கோரிக்கையின் நோக்கம் பற்றியே தெளிவுபடுத்துகின்றோம். சுரேஷ் சலே இன்னமும் […]

உலகம் செய்தி

ராணுவ நடவடிக்கைகளுக்கு தடை: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்!

  • June 4, 2026
  • 0 Comments

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஆதரவாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை (House of Representatives) வாக்களித்துள்ளது. ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்த வார இறுதியில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்படக்கூடும் என ஜனாதிபதி டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸின் (அமெரிக்க நாடாளுமன்றம்) அனுமதி பெறாமல் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஜனநாயகக் கட்சியினரால் கொண்டு வரப்பட்ட ‘போர் அதிகாரத் தீர்மானத்திற்கு’ ஆதரவாக பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. […]

இலங்கை

மருந்து பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்!

  • June 4, 2026
  • 0 Comments

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து மருந்து பொருட்களின் விலையை அதிகரிக்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் விலைகளை அதிகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதேவேளை   அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 60 மருந்து வகைகளின் விலைகளையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை […]

உலகம் செய்தி

லெபனான், இஸ்ரேலுக்கிடையில் புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்!

  • June 4, 2026
  • 0 Comments

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு தனது தாக்குதல்களை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும், எல்லைப் பகுதியிலிருந்து தனது படைகளை வெளியேற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. லெபனான் ராணுவம் குறிப்பிட்ட பகுதிகளில் முழுமையான கட்டுப்பாட்டை எடுப்பதற்கு அமெரிக்கா உதவி செய்யும், இதன் மூலம் ஆயுதக்குழுக்களின் ஆதிக்கம் குறைக்கப்படும். எனினும், இரு […]