இலங்கையில் அடை மழை: 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!
இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் வவுனியா உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடை மழை, கடும் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக 4 ஆயிரத்து 291 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
4 வீடுகள் முழுமையாகவும், 973 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், இன்று காலை ஆட்டோமீது மரமொன்று முறிந்து விழுந்ததில் மூவர் பலியாகியுள்ளனர்.
மலையகத்தில் பல பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்துவருகின்றது.





