அரசியல் இலங்கை செய்தி

கோட்டாபய குறிவைப்பு: பதறுகிறது மொட்டு கட்சி!

  • June 4, 2026
  • 0 Comments

“கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமாகும் என காண்பிப்பதற்கு சிஐடி சதித்திட்டம் தீட்டிவருகின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாம் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கவில்லை. சிஐடியின் (குற்றப் புலனாய்வு திணைக்களம்) கோரிக்கையின் நோக்கம் பற்றியே தெளிவுபடுத்துகின்றோம். சுரேஷ் சலே இன்னமும் […]

உலகம் செய்தி

ராணுவ நடவடிக்கைகளுக்கு தடை: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்!

  • June 4, 2026
  • 0 Comments

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஆதரவாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை (House of Representatives) வாக்களித்துள்ளது. ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்த வார இறுதியில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்படக்கூடும் என ஜனாதிபதி டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸின் (அமெரிக்க நாடாளுமன்றம்) அனுமதி பெறாமல் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஜனநாயகக் கட்சியினரால் கொண்டு வரப்பட்ட ‘போர் அதிகாரத் தீர்மானத்திற்கு’ ஆதரவாக பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. […]

இலங்கை

மருந்து பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்!

  • June 4, 2026
  • 0 Comments

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து மருந்து பொருட்களின் விலையை அதிகரிக்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் விலைகளை அதிகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதேவேளை   அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 60 மருந்து வகைகளின் விலைகளையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை […]

உலகம் செய்தி

லெபனான், இஸ்ரேலுக்கிடையில் புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்!

  • June 4, 2026
  • 0 Comments

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு தனது தாக்குதல்களை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும், எல்லைப் பகுதியிலிருந்து தனது படைகளை வெளியேற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. லெபனான் ராணுவம் குறிப்பிட்ட பகுதிகளில் முழுமையான கட்டுப்பாட்டை எடுப்பதற்கு அமெரிக்கா உதவி செய்யும், இதன் மூலம் ஆயுதக்குழுக்களின் ஆதிக்கம் குறைக்கப்படும். எனினும், இரு […]

இலங்கை செய்தி

குவைத் விமான நிலையம்மீது தாக்குதல்: மூன்று இலங்கையர்கள் காயம்!

  • June 4, 2026
  • 0 Comments

குவைத் சர்வதேச விமான நிலையம்மீது ஈரான் நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளனர். குவைத்திலுள்ள இலங்கைத் தூதுரகம் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மூன்று இலங்கையர்களும் அங்கு மின்தூக்கி பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றிவந்துள்ளனர் என தெரியவருகின்றது. ஈரான் நேற்று நடத்திய மேற்படி தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 63 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ட்ரம்பின் புதிய வரி விதிப்புக்கு ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் சீனா உட்பட சுமார் 60 நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு 12.5 சதவீத வரி விதிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்று ஆஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது. கட்டாயத் தொழிலாளர் முறையைத் தடுக்கத் தவறிய நாடுகள் தொடர்பில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து இந்தப் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதில் […]

இலங்கை செய்தி

செம்மணியில் 272 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனச் சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும் 5 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 15ஆம் நாள் அகழ்வு நடவடிக்கைகள் நேற்றுப் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் இடம்பெற்றது. அகழ்வின் போது சிறுவர்களினது எனச் சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் […]

இலங்கை செய்தி

செம்மணியில் குழந்தைகளின் எம்புத் தொகுதிகள் அடையாளம்!

  • June 4, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளமானது புதிய கட்டளைகளுக்கு அமைய விஸ்தீரணம் செய்யப்பட்டு, அகழ்வு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், நேற்றைய அகழ்வுகளின் போது குழந்தைகளின் எலும்புத் தொகுதிகள் உட்பட மேலும் பல மனித எலும்புத் தொகுதிகள் புதிதாகத் தென்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாம் பகுதியானது, சுமார் மூன்று வார கால இடைவெளிக்குப் பின்னர் கடந்த திங்கட்கிழமை நீதிமன்ற உத்தரவின் பேரில் உத்தியோகபூர்வமாக […]

செய்தி விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இலங்கை அணி!

  • June 4, 2026
  • 0 Comments

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது. குசல் மெண்டிஸ் 62 பந்துகளில் 72 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க […]

உலகம்

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள அமண்டா புயல் தொடர்பில் அறிவுறுத்தல்!

  • June 3, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலில் அமண்டா (Amanda) எனப் பெயரிடப்பட்ட வெப்பமண்டல புயல் உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் பாஹா கலிபோர்னியா தீபகற்பத்திற்கு மேற்கே சுமார் 1,475 மைல் தொலைவில் இந்தப் புயல் நிலைக்கொண்டுள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இந்தப் பருவத்தின் முதல் வெப்பமண்டல சூறாவளியாகும். புயலின் தற்போதைய காற்றின் வேகம் மணிக்கு 40 மைல் ஆகும். அடுத்த சில நாட்களில் இந்தப் புயல் வலுப்பெற்று, வார இறுதியில் பலவீனமடையும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.