இந்தியா

ஒரு துளி தண்ணீர் கூட பாகிஸ்தானுக்குள் செல்லாது – இந்தியா உறுதி!

  • June 11, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான நதி பகிர்வு ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டிற்கு தண்ணீர் வழங்குவதை தடுக்க இந்தியா செயற்பட்டு வருவதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் காரணமாக 26 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து  பாகிஸ்தானுடனான  சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியது. இதற்கமைய “ஒரு துளி தண்ணீர் கூட” பாகிஸ்தானுக்குள் செல்லாது என்பதை உறுதிப்படுத்த புது டெல்லி செயல்பட்டு வருவதாக  மத்திய அமைச்சர் ஒருவர் கூறினார். மோடி இந்த […]

உலகம்

கியூபாவில் நாளாந்தம் மடியும் பிஞ்சு உயிர்கள்! அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை!

  • June 11, 2026
  • 0 Comments

கியூபாவில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கம்யூனிச ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து தனக்கு அடிப்பணியவைக்கும் நோக்கில் அமெரிக்கா செயற்பட்டு வருகிறது. இதற்கமைய கியூபா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது மட்டுமல்லாமல் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். இது கியூப மக்களின் வாழ்வாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. கியூபாவின் வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் (Bruno Rodriguez), “எரிபொருள் பற்றாக்குறையால், 6.3 மில்லியன் டொலர் (5.4 மில்லியன் யூரோ) […]

ஐரோப்பா செய்தி

வட்டி விகிதங்களை உயர்த்த ஐரோப்பிய மத்திய வங்கி திட்டம்!

  • June 11, 2026
  • 0 Comments

ஈரான் போரினால் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ள நிலையில், ஐரோப்பாவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்ட இரண்டு சதவீத இலக்கைத் தாண்டி தற்போது மூன்று சதவீதத்திற்கும் மேல் உள்ளதால், இந்த நிதி நிலை மாற்றம் அவசியமெனக் கருதப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்தாலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும் விலைவாசி உயர்வைக் குறைக்கவும் வங்கி அதிகாரிகள் இந்த முடிவை எடுக்க உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் […]

உலகம்

குவைத் விமான நிலையம் மீளவும் திறக்கப்பட்டது!

  • June 11, 2026
  • 0 Comments

ஈரானியத் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத் தனது வான்வெளியைத் தற்காலிகமாக மூடிப்பட்டிருந்த நிலையில் மீளவும் வழமைக்கு திரும்பியுள்ளது. இன்று அதிகாலை குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் கூறியிருந்தனர். இந்த தாக்குதல்களை தொடர்ந்து குவைத் அரசாங்கம் வான்வெளியை மூடியதுடன்,   விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து தற்போது வான்வெளி மீளவும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

உலகம் செய்தி

இன அழிப்பு: சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கையை வரவேற்கிறது ஹமாஸ்!

  • June 11, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல் முன்னெடுக்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கையை ஹமாஸ் அமைப்பு வரவேற்றுள்ளது. குடியேறிகளின் வன்முறை என்பது தற்செயலான நிகழ்வு அல்ல, மாறாக அது இஸ்ரேலிய அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு முறையான தாக்குதல் என்று ஹமாஸ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அத்துமீறல்கள் சர்வதேச சட்டங்களை வெளிப்படையாக மீறுவதாகவும், உலக நாடுகளின் மௌனம் இஸ்ரேலின் குற்றங்களுக்குத் துணையாக இருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி […]

இலங்கை செய்தி

யானை தாக்கி பெண் பலி : திருமலையில் சோகம்!

  • June 11, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளார். திருகோணமலை சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதங்கபுர பகுதியில் யானை தாக்கி 73 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. யானை தாக்கி காயமடைந்த இப் பெண் சேருவில வைத்தியசாலையிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதேவேளை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவெவ பகுதியில் […]

இலங்கை செய்தி

உணவு ஒவ்வாமையால் 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

  • June 11, 2026
  • 0 Comments

திருகோணமலை , கந்தளாய் ஆயிஷா பெண்கள் மகா வித்யாலயத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையானதாலேயே மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவாக அன்னாசிப்பழம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை மஹதிவுல்வெவ பாடசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் நேற்று (10) அனுமதிக்கப்பட்டனர். குறித்த மாணவர்களுக்கு பசும்பால் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

செய்தி பொழுதுபோக்கு

பாரதிராஜாவின் பூதவுடல் அரச மரியாதையுடன் இன்று நல்லடக்கம்

  • June 11, 2026
  • 0 Comments

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி மாவட்டம் காட்ரோடில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு இன்று காலை எடுத்துவரப்பட்டது. பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி அல்லிநகரம் ஆகும். எந்த பின்னணியும் இல்லாமல் கிராமத்தில் இருந்து சினிமாவில் உச்சம் தொட்டவர் இவர். மண்மணம் வீசும் திரைப்படங்களை அதிகம் எடுத்ததுடன் […]

இலங்கை செய்தி

காணி பிரச்சினை குறித்து ஆஸ்திரேலிய தூதுவர் ஆராய்வு!

  • June 11, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வொர்த் , கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். ஆஸ்திரேலிய தூதுவர் கிழக்குக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கிழக்கு மாகாணத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகள், அதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்கக்கூடிய ஆதரவு, கடல்சார் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு, சுற்றுலாத் தொழில், மீன்பிடி மற்றும் விவசாயத் தொழில்களின் அபிவிருத்தி ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள நிலம் […]

இலங்கை செய்தி

சுரேஷ் சலே சூழச்சி: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

  • June 11, 2026
  • 0 Comments

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ சூழ்ச்சியுடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு உள்ளது. நீர்கொழும்பு பகுதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின் தகவல்களை திரட்டியுள்ளார். சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. திட்டமிட்ட அடிப்படையிலேயே உணவு தவிர்ப்பு போராட்டத்தைக்கூட முன்னெடுத்திருந்தார். இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். தொலைபேசி மற்றும் மடிக்கனிணி என்பவற்றின் கடவுச்சொல்லைக்கூட அவர் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கவில்லை. தகவல்களை மூடிமறைக்க முற்படுகின்றார். ஆனால் இதுவரை கிடைக்கப்பெற்ற விஞ்ஞானப்பூர்வமான சாட்சியங்களின் அடிப்படையில் அவருக்கு மேற்படி […]