உலகம் செய்தி

மீண்டும் பதற்றம்: தெற்கு ஈரானில் அமெரிக்கா தாக்குதல்!

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை தளங்கள் மற்றும் கடலில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானிய படகுகளைக் குறிவைத்து புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஈரானியப் படைகளால் எங்கள் படைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக, ‘தற்காப்பு’ நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.

தெற்குத் துறைமுக நகரான பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) அருகே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் அமைதிப் பேச்சில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, “இன்னும் உடன்படிக்கை சாத்தியம்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!