இந்தியா

தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு!

  • April 16, 2026
  • 0 Comments

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைமூலம் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 இல் இருந்து 59 ஆக அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். தொகுதி மறுவரையறை சட்டமூலம் 2026-ஐ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் முன்வைத்தார். இச்சட்டமூலத்துக்கு தமிழக அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. தமிழக கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் மேற்படி சட்டமூலம்மீதான விவாதத்தில் உரையாற்றிய அமித் ஷா, “ஐந்து தென்மாநிலங்களில் தற்போது 129 மக்களவைத் […]

இலங்கை செய்தி

அன்னை பூபதிக்கு தமிழர் தலைநகரில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!

  • April 16, 2026
  • 0 Comments

அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16) காலை திருகோணமலை சிவன் கோவிலடியை சென்றடைந்தது. இதன்போது பொதுமக்கள் அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, தீபச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருகோணமலையின் முக்கிய பகுதிகளிலும் அவருடைய உருவப்படத்திற்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து […]

உலகம் செய்தி

ஈரானின் மிக முக்கிய இலக்குகளை தாக்குவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை!

  • April 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின்போது ஈரான் இணக்கத்துக்குவர தவறும் பட்சத்தில் அந்நாடு மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் israel katz எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் நடவடிக்கையின்போது தாக்காத மிக முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு இஸ்ரேல் தயாராகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எதிர்காலம் தற்போது அதன் கைகளிலேயே உள்ளது எனவும், தவறான முடிவை எடுத்தால் தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் israel katz எச்சரித்துள்ளார்.

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தீவிரம் -பாதுகாப்பு  குறித்து தளபதி விளக்கம்

  • April 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மத்திய கிழக்கு பிராந்திய பொறுப்புத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், அந்தப் பகுதியில் மேற்கொண்ட தனது அண்மைய பயணம் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். கடந்த பதினைந்து நாட்களுக்குள் அவர் இரண்டு முறை மத்திய கிழக்கு பகுதிக்கு சென்று, அங்கு நிலைமைகளை நேரில் ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளார். தனது பயணத்தின் போது, அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத் துருப்புகளுடன் நேரடியாக சந்திப்புகள் நடத்தப்பட்டதாகவும், அவர்களின் செயற்பாடுகள், தயார்நிலை மற்றும் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்து விரிவாகக் […]

செய்தி விளையாட்டு

அமெரிக்காவில் களமிறங்கும் ஈரான் வீரர்கள்?

  • April 16, 2026
  • 0 Comments

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பங்கேற்பதற்கு ஈரான் அணி அமெரிக்கா வரும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் FIFA நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான் அணி அமெரிக்காவில் விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளை, மெக்சிகோவுக்கு மாற்றுமாறு FIFA விடம் ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இந்நிலையில் ஈரான் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் வழங்கப்படும் என்றும், அவர்கள் திட்டமிட்டபடி அமெரிக்காவிற்குப் பயணம் செய்வார்கள் என்றும் FIFA தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் தற்காலிக போர் […]

உலகம் செய்தி

உலகம் ஒரு சில கொடுங்கோலர்களால் சூறையாடப்படுகிறது!

  • April 16, 2026
  • 0 Comments

பாப்பரசர் போப் லியோ, போர்களுக்காக அதிகளவில் செலவிடும் உலகத் தலைவர்களை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார். கேமரூனில் ஆற்றிய உரையின்போது, ​​உலகம் “ஒரு சில கொடுங்கோலர்களால் சூறையாடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். மோதல்களை நியாயப்படுத்த மத ரீதியான மொழியைப் பயன்படுத்தும் தலைவர்களை அவர் கண்டித்ததோடு,  மோதலால் பாதிக்கப்பட்ட  பிராந்தியத்தில் “தீர்மானமான கொள்கை மாற்றத்திற்கு” அழைப்பு விடுத்தார். மருத்துவம், கல்வி மற்றும் மறுசீரமைப்புக்கான வளங்களோடு ஒப்பிடுகையில், கொலை மற்றும் பேரழிவுகளுக்காக” பெரும் தொகை பணம் செலவழிக்கப்படுவதையும் போப்பாண்டவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்க […]

ஐரோப்பா

அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டச் சரிவால் ஐரோப்பாவிற்கு காத்திருக்கும் ஆபத்து!

  • April 16, 2026
  • 0 Comments

அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டச் சரிவானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டாக்டர் வாலண்டின் போர்ட்மேன் இன்ரியா  ( Dr Valentin Portman Inria) தலைமையிலான குழு தொடர்புடைய ஆய்வை முன்னெடுத்திருந்தது. ஆய்வின்படி மெரிடியனல் ஓவர்டேர்னிங் சர்குலேஷன் (Amoc) சரிவடைவதற்கான வாய்ப்பு முன்னர் கணிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் Amoc அதன் முடங்கும் நிலையை அடையக்கூடும் என்றும், 2100-ஆம் ஆண்டிற்குள் அதன் வேகம் 42-58 சதவீதம் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த […]

இலங்கை செய்தி

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

  • April 16, 2026
  • 0 Comments

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (17) செயற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீர்செய்வதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,  இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகம்

கானாவில் பிச்சை எடுத்து வந்த 300இற்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாட்டினர் மீட்பு!

  • April 16, 2026
  • 0 Comments

கானா தலைநகர் அக்ராவில் பிச்சை எடுக்கும் கும்பல்கள்களை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், 113 குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட மேற்கு ஆப்பிரிக்க நாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர். கானா குடிவரவு சேவை,  உளவுத்துறையின் உதவியுடன் நடத்திய சோதனையில் அவர்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 305 பேரின் நாடு வாரியான விவரங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் அவர்களில் 36 சிறுவர்கள், 77 சிறுமிகள், 66 பெண்கள் மற்றும் 126 ஆண்கள் அடங்குவதாகக் கூறப்படுகிறது. சிறார்கள் பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்படுவதாகவும், வெளிநாட்டுப் பிரஜைகளை, […]

புகைப்பட தொகுப்பு

மயில் போல பொண்ணு ஒன்னு – திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

  • April 16, 2026
  • 0 Comments

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே அதிக கிளாமருடன் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார். இரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்த திவ்யபாரதிக்கு ஒருகட்டத்தில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் சின்ன ரோலில் நடித்து […]

error: Content is protected !!