அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி தளங்களை கடுமையாக தாக்குவோம் – ஈரான் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தனது மின் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டால் அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி தளங்களை கடுமையாக தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணை 48 மணி நேரத்திற்குள் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை முற்றிலுமாக அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான இந்த நீர்வழிப்பாதை குறித்து தற்போது கவலை அதிகரித்துள்ளது. […]













