உலகம் செய்தி

ஈரானில் இரண்டு அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்  – கதிரியக்க கசிவு?

  • March 27, 2026
  • 0 Comments

ஈரானில் இரண்டு அணுசக்தி தொடர்பான நிலையங்கள் தாக்கப்பட்டதாக அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும், எந்தவித கதிரியக்க கசிவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வடமேற்கு ஈரானில் அமைந்துள்ள கோண்டாப் கனநீர் வளாகம் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப் படைகளால் தாக்கப்பட்டதாக Islamic Republic News Agency (IRNA) தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என மார்க்கஸி மாகாண அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், யஸ்த் மாகாணத்தின் அர்தகான் நகரில் உள்ள யெல்லோகேக் உற்பத்தி நிலையமும் தாக்கப்பட்டதாக தகவல் […]

இலங்கை செய்தி

38,000 மெட்ரிக் டொன் டீசல் மற்றும் பெட்ரோல் நாளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு

  • March 27, 2026
  • 0 Comments

38,000 மெட்ரிக் டொன் டீசல் மற்றும் பெட்ரோல் அடங்கிய ஒருங்கிணைந்த சரக்கு, இந்தியாவிலிருந்து நாளை (29) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடையும் என இந்திய உயர் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே மார்ச் 24 அன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் விளைவாக இந்த எரிபொருள் வந்து சேரும் என்று உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த 38,000 மெட்ரிக் டொன் எரிபொருள் சரக்கில் 20,000 மெட்ரிக் டொன் […]

உலகம் செய்தி

ஈரான் எரிசக்தி ஆலை தாக்குதல் தாமதம் – ட்ரம்ப் முடிவு புதிய திருப்புமுனையா?

  • March 27, 2026
  • 0 Comments

ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதை மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முடிவு, நீடித்து வரும் மோதலில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த முடிவு நிரந்தரமானதா என்பது குறித்து உறுதி இல்லாதபோதிலும், ட்ரம்ப் இந்த கால அவகாசத்தை அரசியல் மற்றும் இராஜதந்திர நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. ஈரானின் எரிசக்தி அமைப்புகளை தாக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியிருப்பது, பதற்றத்தை குறைப்பதற்கும், சர்வதேச சந்தைகளில் அமைதியை ஏற்படுத்துவதற்கும் உதவக்கூடும். […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர்: பலியானோர் எண்ணிக்கை வெளியீடு!

  • March 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் இன்று 28 ஆவது நாளாக தொடர்ந்தது. உயிரிழப்புகள், உடமை இழப்புகள், கட்டிடங்கள் சேதம் என பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரையில் ஈரானில் 1,937 பேர் பலியாகியுள்ளனர். 24,800 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 19 பேர் பலியாகியுள்ளனர். 5,492 பேர் காயமடைந்துள்ளனர். ஏனைய நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை […]

இலங்கை செய்தி

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள தென்னை முக்கோண வலயம் தொடர்பில் ஆராய்வு!

  • March 27, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்னை முக்கோண வலயத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (27.03.2026) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தென்னை பயிர்ச்செய்கை சபையின் உதவிப் பொதுமுகாமையாளர் ரி.வைகுந்தன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தென்னை முக்கோண வலயச் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளித்தார். 16,000 ஏக்கர் அடையாளப்படுத்தப்பட்டு பயனாளிகளுக்குத் தேவையான தென்னம்பிள்ளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன […]

உலகம் செய்தி

மத்திய ஈரானில் அராக் பகுதியிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை

  • March 27, 2026
  • 0 Comments

மத்திய ஈரானின் மார்க்கஸி மாகாணம், அராக் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் அந்தப் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் முக்கிய நோக்கம் ஈரானிய ஆட்சியின் இராணுவ உட்கட்டமைப்பைத் தாக்குவதாகும். ஈரானில் உள்ள மக்களுக்கு “உங்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக உடனடியாக வெளியேறுமாறு” அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த பகுதிகளில் […]

உலகம் செய்தி

உக்ரைன்மீதான ஆக்கிரமிப்பை திசை திருப்ப மத்திய கிழக்கு போரை பயன்படுத்தும் ரஷ்யா

  • March 27, 2026
  • 0 Comments

உக்ரைன் மீதான தனது ஆக்கிரமிப்பு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப ரஷ்யா முயல்வதாகக் ஜேர்மன் குற்றஞ்சாட்டியுள்ளது. பிரான்ஸில் நடைபெறும் G7 மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன், ஈரானின் இராணுவத் தாக்குதல்களுக்குத் தேவையான இலக்குகளை அடையாளம் காண புடின் உதவி செய்துவருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைப் பயன்படுத்தி ரஷ்யா தனது குற்றங்களை மறைக்க முயற்சிக்கின்றது. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட ஜேர்மன் […]

உலகம்

நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு

  • March 27, 2026
  • 0 Comments

நேபாளத்தின் புகழ்பெற்ற ராப் இசைக்கலைஞரும், முன்னாள் மேயருமான 35 வயதுடைய பாலேந்திர ஷா (Balen Shah), நேபாளத்தின் மிக இளவயது பிரதமராக இன்று பதவியேற்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சமூக ஊடகத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக நேபாள இளைஞர்கள் (Gen-Z) முன்னெடுத்த மாபெரும் போராட்டத்தினால் அப்போதிருந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாட்டின் முதல் பொதுத்தேர்தலில், பாலேந்திர ஷா தலைமையிலான கட்சி 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர் மேலும் உக்கிரமடையும்: போலந்து பிரதமர் எச்சரிக்கை!

  • March 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கின் போர்ச்சூழல் மேலும் மோசமடையக்கூடும் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் Donald Tusk எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது நட்பு நாடுகளிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், இப்பகுதியில் வரும் நாட்களில் அமைதி திரும்புவது கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறைப் போக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வரப்போகும் மாற்றங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். எனினும், இந்தச் சாத்தியமான மோதல்கள் குறித்த கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

இலங்கை செய்தி

‘கொலையாளிக்கு துணைபோகாதீர்’ – மட்டக்களப்பில் போராட்டம்!

  • March 27, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மட்டக்களப்பில் இன்று (27) பாரிய கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமான இந்தப் போராட்டம், பின்னர் மாவட்ட செயலகம் வரை அமைதியான முறையில் பேரணியாகச் சென்றது. இதன்போது, போராட்டக்காரர்கள் மாவட்ட செயலகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், பொலிஸாரால் பஸ்கள் குறுக்கே நிறுத்தப்பட்டு, பிரதான வாயில் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. […]

error: Content is protected !!