உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் தெற்கு லெபனானில் மூன்று ஊடகவியலாளர்கள் பலி!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவரை ஹிஸ்புல்லா அமைப்பின் செயல்பாட்டாளர் என இஸ்ரேலிய ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இச்சம்பவம் சர்வதேச சட்ட மீறல் என்று லெபனான் ஜனாதிபதி கடுமையாகச் சாடியுள்ளார்.

போர் சூழலில் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுவது குறித்து லெபனான் மக்கள் பெரும் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர்.

ஏற்கனவே பல நூறு குடிமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலியாகியுள்ள நிலையில், இஸ்ரேல் வேண்டுமென்றே ஊடகத்துறையினரைத் தாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

காசாவில் பயன்படுத்தப்பட்ட கொடூரமான யுத்த அணுகுமுறை தற்போது லெபனானிலும் தொடர்வதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இஸ்ரேல்மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி