உலகம் செய்தி

வங்கதேசத்தில் இந்து பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொலை

  • January 5, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) இந்து நபர்கள் மீதான தாக்குதலுக்கு மத்தியில், செய்தித்தாளின் தற்காலிக ஆசிரியரும் தொழிற்சாலை உரிமையாளருமான 45 வயது நபர் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தென்மேற்கு வங்கதேசத்தில் உள்ள ஜஷோரில்(Jashore) உள்ள மணிராம்பூர்(Manirampur) துணை மாவட்டத்தின் கோபாலியா பஜார்(Gopalia Bazaar) பகுதியில் ராணா பிரதாப் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அருவா(Arua) கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரின் மகன் பிரதாப், இரண்டு ஆண்டுகளாக கோபாலியா பஜாரில் ஒரு ஐஸ் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். சம்பவ […]

உலகம்

சீனாவின் மாய உலகம்!

  • January 5, 2026
  • 0 Comments

வடகிழக்கு சீன நகரமான ஹார்பினில் (Harbin) மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் பிரமாண்டமான  விழா ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இடம்பெறும். பல கலைஞர்கள் ஒன்றிணைந்து ஆண்டின் சிறந்த பனிச் சிற்பத்தை உருவாக்குவதற்காக போராடுவார்கள். இது ஏராளமான மக்களை ஈர்க்கும். இதுவொரு மாயாஜாலம் நிறைந்த கனவு உலகை போன்றது. இந்த விழா பிப்ரவரி நடுப்பகுதி வரை நீடிக்கும். இது தொடர்பான சில புகைப்படங்கள் மட்டும் தற்போது வெளியாகியுள்ளன.    

இலங்கை செய்தி

புகையிரத திணைக்களத்திற்கு 100 புதிய நிலைய அதிபர்கள்

  • January 5, 2026
  • 0 Comments

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் தரம் III பதவிக்காக 100 புதிய அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (05) நடைபெற்றது. புகையிரத திணைக்கள கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது இலங்கை ரயில்வே துறை, தரம் III நிலைய அதிபருக்கு 100 புதிய நியமனங்களை வழங்கியுள்ளது. புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகளும், அமைச்சின் தொழிற்சங்க ஒருங்கிணைப்புச் செயலாளர் எஸ்.பி. விதானகே உள்ளிட்ட குழுவினரும் இங்கு […]

உலகம்

ஈரானில் அதிகரித்து வரும் போராட்டம் – தப்பிச் செல்ல தயாராகும் உச்சத்தலைவர்!

  • January 5, 2026
  • 0 Comments

ஈரானில் பொருளாதார பிரச்சினையால் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் வலுவடைந்து வருகின்ற நிலையில், அந்நாட்டின் உச்சத்தலைவர் ரஷ்யாவிற்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர் புட்டினிடம் தஞ்சம் கோரியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போராட்டங்களை கட்டுப்படுத்த அந்நாட்டின் இராணுவம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஈரானில் போராட்டங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக ட்ரம்ப் எச்சரக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இராணுவமும் பாதுகாப்புப் படைகளும் போராட்டங்களை முடிவுக்குக் […]

உலகம் செய்தி

வெனிசுலாவில் ஜனநாயக மாற்றம் வேண்டும் – அமெரிக்கா பக்கமா ஸ்டார்மர்?

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் “ஜனநாயகத்திற்கு அமைதியான மாற்றத்தை காண விரும்புவதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் [Keir Starmer] தெரிவித்துள்ளார். சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “வெனிசுலாவில் நிகழ்ந்தவை மிகவும் முக்கியமானவை. ஜனாதிபதி சட்டவிரோதமாக செயற்படுவதால், நாட்டிற்கு ஜனநாயக மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை நாங்கள் நீண்ட காலமாக ஆதரித்து வருகிறோம். சர்வதேச சட்டம் நாட்டின் எதிர்காலத்திற்கு நங்கூராக இருக்க வேண்டும். அமெரிக்கா எடுக்கும் […]

இலங்கை செய்தி

ட்ரம்புக்கு எதிராக போராட்டம்: கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை கண்டித்து கொழும்பில் இன்று (05) மாலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட மக்கள் போராட்ட இயக்கத்தினரால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடதுசாரி அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். வெனிசுலா இறையாண்மைமிக்க சுதந்திர நாடெனவும், அதன்மீதான ஆக்கிரமிப்பு மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி கைது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். போரை உருவாக்கி, எண்ணைவளத்தை கொள்ளையடிக்க முற்படுகின்றனர் எனவும் […]

ஐரோப்பா செய்தி

வேல்ஸில் அனுமதியின்றி ரோயல் கடற்படை சீருடை அணிந்தவர் கைது

  • January 5, 2026
  • 0 Comments

வடக்கு வேல்ஸில் நினைவு நிகழ்வொன்றில் அனுமதியின்றி ரோயல் கடற்படையின் உயர் அதிகாரியாக உடை அணிந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். க்வினெட்டில் (Gwynedd) இல் உள்ள ஹார்லெச்சை (Harlech) சேர்ந்த 65 வயதான ஜோனாதன் கார்லி [Jonathan Carley] அனுமதியின்றி ரோயல் கடற்படையின் சீருடை மற்றும் பதக்கங்களுடன் ஆடை அணிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் அவரது படங்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, வடக்கு வேல்ஸில் உள்ள லாண்டுட்னோ [Llandudno] வில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இந்த […]

இலங்கை செய்தி

2025 உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளுக்கு நாளை முதல் தடை

  • January 5, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நாளை நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் […]

உலகம் செய்தி

கிழக்கு காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தீவிரம்

  • January 5, 2026
  • 0 Comments

கிழக்கு காசாவில், இஸ்ரேலிய இராணுவம் கடந்த 24 மணிநேரமாக தனது கட்டுப்பாட்டு பகுதியை விரிவுபடுத்தி வருவதாக அல் ஜசீரா செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முக்கியமான சலா அல்-தின்வீதி [Salah al-Din Road]க்கு அருகே தங்கியிருந்த பல இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காசா மீது இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிப்பதால், தற்போது காசா பகுதியின் 50 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பதாக […]

உலகம் செய்தி

பொருளாதார நெருக்கடியால் ஈரானில் போராட்டங்கள் தீவிரம்

  • January 5, 2026
  • 0 Comments

ஈரானின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை எதிர்த்து முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வெளியான வீடியோக்களில், தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. கடந்த வாரத்திலிருந்து நாட்டின் 31 மாகாணங்களில் 26 மாகாணங்களில் போராட்டங்கள் நடந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த போராட்டங்களில் இதுவரை குறைந்தது 19 போராட்டக்காரர்களும், ஒரு பாதுகாப்புப் படை உறுப்பினரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டால், ஈரானிய அதிகாரிகள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் […]