பொழுதுபோக்கு

பொங்கல் ரேஸில் ‘வா வாத்தியார்’.. எம்.ஜி.ஆர் ஆசியுடன் களம் இறங்கும் கார்த்தி!

  • January 13, 2026
  • 0 Comments

நீண்ட இழுபறிக்குப் பிறகு, கார்த்தி மற்றும் நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம் இந்த பொங்கல் (ஜனவரி 14, 2026) அன்று திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் கார்த்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் (MGR) தீவிர ரசிகராக நடித்துள்ளார். படத்தில் பல இடங்களில் எம்ஜிஆர் பற்றிய குறிப்புகளும் (References), அவரது பாடல்களும் இடம்பெற்றுள்ளன. “கேப்டன் விஜயகாந்த் போலவே, எம்ஜிஆரின் ஆசி இந்தப் படத்திற்கு இருக்கும்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

உலகம்

ஈரான் போராட்டம் – 2000 பேர் மரணம் : உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

  • January 13, 2026
  • 0 Comments

ஈரானில் நடந்த போராட்டங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரி ஒருவர் இன்று அறிவித்துள்ளார். இரண்டு வாரங்களாக நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்று வரும் போராட்டங்களில் இறப்பு தொடர்பான தகவல்களை அதிகாரி ஒருவர் உத்தியோகப்பூர்வமாக பகிர்ந்துகொள்வது இதுவே முதல் முறை. இருப்பினும் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விரிவான விபரங்களை அவர் வெளியிடவில்லை. மோசமான பொருளாதார நிலைமைகளால் தூண்டப்பட்ட இந்த அமைதியின்மை, குறைந்தது மூன்று ஆண்டுகளாக ஈரானிய அதிகாரிகளுக்கு மிகப்பெரிய உள் சவாலாக […]

செய்தி விளையாட்டு

LPL 6வது தொடர் ஜூலை ஆரம்பம்

  • January 13, 2026
  • 0 Comments

லங்கா பிரீமியர் லீக் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 6-வது அத்தியாயத்திற்கான புதிய திகதிகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 8-ஆம் திகதி ஆரம்பமாகி, ஆகஸ்ட் 8-ஆம் திகதி வரை நடைபெறும். இதற்கான வீரர்கள் வரைவு (Draft) வரும் மார்ச் 22-ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. பெப்ரவரி-மார்ச் மாதங்களில் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்காக மைதானங்களைத் தயார்படுத்தும் நோக்கில், கடந்த டிசம்பரில் நடைபெறவிருந்த இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

ஈரான் மக்களுக்கு எதிரான வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது – ஐ.நா

  • January 13, 2026
  • 0 Comments

ஈரான் மக்களுக்கு எதிரான வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் (Volker Turk ) தெரிவித்துள்ளார். ஈரானின் அரசு ஊடகங்கள் அண்மையில் 100 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியிட்டுள்ளனர். ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர். ஈரான் இணைய சேவைகளை ஐந்தாவது நாளாக துண்டித்துள்ள நிலையில் போராட்டங்கள் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி, […]

இந்தியா செய்தி

தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் கடிதம்

  • January 13, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் இந்த கைது நடவடிக்கை மீனவ குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை 83 மீனவர்களும், 252 படகுகளும் இலங்கை […]

உலகம்

வன்முறை மூலம் கட்டமைக்கப்படும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் – ஜெர்மனி!

  • January 13, 2026
  • 0 Comments

ஈரானில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் நடப்பு அரசாங்கத்தின் வீழ்ச்சியை காட்டுவதாக ஜெர்மனி விமர்சித்துள்ளது. ஈரானின் ஆட்சி அதன் “இறுதி நாட்கள்களில் இருப்பதாக ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) கூறியுள்ளார். வன்முறை மூலம் மட்டுமே ஒரு ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும் என்றால், அந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானில் தற்போது இடம்பெற்று போராட்டங்களில் அமெரிக்கா தலையிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி […]

ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்: ‘வெறுப்புணர்வு’ குழுக்களுக்குத் தடை

  • January 13, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் மத மற்றும் இன ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் அமைப்புகளைத் தடை செய்யும் புதிய சட்டவரைவை தொழிலாளர் கட்சி அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், ஒரு அமைப்பை ‘வெறுப்புணர்வு குழுவாக’ (Hate Group) அறிவிக்க பரிந்துரைக்கும் அதிகாரம் அவுஸ்திரேலிய பாதுகாப்பு உளவு அமைப்பான ‘ஏசியோ’ (ASIO) தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்குழுக்களில் உறுப்பினராக இருப்பதோ அல்லது அவர்களுக்கு ஆதரவளிப்பதோ கடும் குற்றமாகக் கருதப்படும். இத்தகைய அமைப்புகளை வழிநடத்துபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் அடுத்த தேர்தல் : கன்சர்வேடிவ் – சீர்திருத்த UK இணைகிறதா?

  • January 13, 2026
  • 0 Comments

அடுத்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியை தோற்கடிப்பதற்காக கன்சர்வேடிவ் கட்சியும் சீர்திருத்த யுகே கட்சியும் இணக்க நிலைக்கு வரலாம் என சீர்திருத்த UK கட்சியின் உறுப்பினர் நடின் டோரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் மனநிலை வலதுபுறமாக நகர்வதை கருத்துக்கணிப்புகள் தெளிவாக காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கன்சர்வேடிவ் வாக்குகளும் சீர்திருத்த UK கட்சியின் வாக்குகளும் இணைந்தால், சக்திவாய்ந்த அரசியல் பலமாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார். இடதுசாரிகளை ஆட்சியில் இருந்து விலக்குவதற்காக, இரு கட்சிகளுக்கும் இடைய உடன்பாடொன்று எட்டப்படலாம் என்றும் […]

உலகம் செய்தி

டொனால்ட் ட்ரம்ப்பின் 10 பில்லியன் டொலர் வழக்கு: நீதிமன்றத்தை நாடிய பிபிசி

  • January 13, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்த 10 பில்லியன் டொலர் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, பிபிசி (BBC) நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 2021-ம் ஆண்டு கேபிடல் கலவரத்தின் போது ட்ரம்ப் ஆற்றிய உரையை, பிபிசியின் ‘பனோரமா’ நிகழ்ச்சி தவறாகத் தொகுத்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. வெவ்வேறு நேரங்களில் பேசிய வார்த்தைகளை ஒன்றாக இணைத்து, வன்முறையைத் தூண்டியது போன்ற தோற்றத்தை பிபிசி உருவாக்கியதாக ட்ரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்கனவே பிபிசி மன்னிப்பு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவுக்கு போர் அபாயம்? ; ராணுவத் தளபதி எச்சரிக்கை

  • January 13, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் போர் மூண்டால் நாட்டைப் பாதுகாக்க பிரித்தானியாவிடம் முறையான ‘தேசிய பாதுகாப்புத் திட்டம்’ இல்லை என்று அந்நாட்டின் ராணுவத் தளபதி பகிரங்கமாக எச்சரித்துள்ளார். குறிப்பாக, போர்க்காலங்களில் காயமடைந்த பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க தேசிய சுகாதார சேவையை (NHS) எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தெளிவான வரைபடங்கள் ஏதுமில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு கைவிடப்பட்ட ‘அரசு போர் கையேடு’ (Government War Book) போன்ற வழிகாட்டிகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. நிதிப் பற்றாக்குறையே இந்த […]

error: Content is protected !!