ஐரோப்பா

ரஷ்யாவின் மற்றுமொரு கப்பலை கைப்பற்ற முனைப்பு காட்டும் பிரித்தானியா!

  • January 13, 2026
  • 0 Comments

விளாடிமிர் புடின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க பிரித்தானியாவின் சிறப்பு படைகள் ரஷ்ய நிழல் கடற்படையின் எண்ணெய் டேங்கர் கப்பலை கைப்பற்றக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர்கள் புதிய சட்ட காரணங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தடைகள் மற்றும் பணமோசடி சட்டத்தின் (2018) கீழ் நாடற்றதாகக் கருதப்படும் கப்பல்களை குறிவைப்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை இதற்கு முன்னதாக வட அட்லாண்டிக்கில் மரைனேரா (Marinera) டேங்கரைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்க நடவடிக்கைக்கு இங்கிலாந்து ஆதரவளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

“தரம் 6” கல்வி மறுசீரமைப்பு ஒத்திவைப்பு! பின்னணி என்ன?

  • January 13, 2026
  • 0 Comments

தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. உரிய மீளாய்வுகளின் பின்னர் 2027 ஆம் ஆண்டு முதல் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி தகவலை வெளியிட்டார். எனினும், தரம் 1 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும் எனவும் அமைச்சர் கூறினார். “ தரம் […]

ஐரோப்பா

லண்டனில் அமைக்கவுள்ள சீன தூதரகத்திற்கு எதிர்ப்பு : எம்.பிகள் கூட்டாக வலியுறுத்தல்!

  • January 13, 2026
  • 0 Comments

லண்டனில் அமைக்க உள்ள சீன தூதரகத்தை நிராகரிக்குமாறு தொழிற்கட்சி எம்.பி.க்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். குறிப்பிடத்தக்க பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி, இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் 09 எம்.பிகள் சமூக செயலாளர் ஸ்டீவ் ரீடிற்கு ( Steve Reed) கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். பிரதமர் சீனாவிற்கு  பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக தூதரகத்தை அங்கீகரிப்பதற்கான அறிவிப்பு வரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே  மேற்படி அறிவிப்பு வந்துள்ளது.

இலங்கை செய்தி

நாடாளுமன்ற வளாகத்தில் ஐஸ் போதைப்பொருள்: தகவல் உண்மையா?

  • January 13, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற வளாகத்தில் ஐஸ் போதைப்பொருள் பாவனை தொடர்பில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை நாடாளுமன்ற செயலகத்தால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. “ நாடாளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள் (ஐஸ்), மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சபாநாயகர ஜகத் விக்கிரமரத்ன தீர்மானித்துள்ளார்” – என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தே இவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் எந்தவொரு அதிகாரிக்கும், அவ்வாறான ஆலோசனைகளையும் சபாநாயகர் வழங்கி இருக்கவில்லை எனவும் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியா – இஸ்ரேல் உறவில் கடும் விரிசல்

  • January 13, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னி போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது. ஆஸ்திரேலிய பிரதமர்மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கு ஆஸ்திரேலியா எடுத்த தீர்மானத்தின் பிரதிபலன் இது என இஸ்ரேல் குற்றஞ்சாட்டி இருந்தது. அதேவேளை, ஆஸ்திரேலியா வருமாறு இஸ்ரேல் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை அவர் ஏற்றிருந்தாலும், இதற்கு இடமளிக்க கூடாது என ஆஸ்திரேலியாவிலுள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் வலியுறுத்திவருகின்றனர். பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் விடயத்தில் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு அமெரிக்கா மேலும் 2 மில்லியன் டொலர் உதவி

  • January 13, 2026
  • 0 Comments

டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவுவதற்காக மேலும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இன்று (ஜனவரி 13, 2026) அறிவித்துள்ளது. இதன் மூலம் இச்சம்பவம் தொடர்பில் அமெரிக்கா வழங்கியுள்ள மொத்த மனிதாபிமான உதவித் தொகை 4 மில்லியன் டொலர்களாக (சுமார் 1.2 பில்லியன் ரூபா) அதிகரித்துள்ளது. இந்த நிதி உதவியானது அம்பாறை, பதுளை, கம்பஹா, கேகாலை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் தோட்டப் பகுதிகளிலும் உள்ள மக்களின் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக பணிப்புரிபவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டது!

  • January 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்வதற்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் அமுலில் உள்ளபோதும்,  சட்டவிரோதமாக வேலை செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது கணிசமாக அதிகரித்துள்ளது. நெயில் பார்கள் மற்றும் டேக்அவே (takeaways) போன்ற இடங்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோதமாக பணிப்புரிவதாக கண்டறிப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வேலை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 59 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி 2025 ஆம் ஆண்டில் மட்டும்  8,971 நபர்கள் கைது  செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக வேலை செய்பவர்களை […]

அரசியல் இலங்கை செய்தி

2 நாளாக தொடர்கிறது விமலின் போராட்டம்: அரசியல் நாடகமென கடும் விமர்சனம்!

  • January 13, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய Harini Amarasooriya விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்சவால் Wimal Weerawansa முன்னெடுக்கப்படும் போராட்டம், இன்று (13) இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியை பிரதமர் துறக்க வேண்டும் ஆகிய இரு விடயங்களை வலியுறுத்தி கல்வி அமைச்சுக்கு முன்பாக தனது சகாக்களுடன் விமல் வீரவன்ச சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்று (12) ஆரம்பித்தார். பிரதமர்மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார். அரச […]

செய்தி பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயன் : வெங்கட் பிரபு கூட்டணி உறுதி

  • January 13, 2026
  • 0 Comments

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்துள்ள “பராசக்தி” திரைப்படம் வசூல் ரீதியாகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ள இந்தப் புதிய திரைப்படத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் வெங்கட் பிரபுவின் முந்தைய ஹிட் படமான ‘மாநாடு’ பாணியில், மிகவும் வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, ‘மாநாடு’ […]

இலங்கை செய்தி

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று திடீர் வேலைநிறுத்தம்

  • January 13, 2026
  • 0 Comments

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய, இன்று கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிதி மற்றும் நிர்வாக மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, அவரை அப்பதவியிலிருந்து நீக்கக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள போதனா வைத்தியசாலை உட்பட சுமார் 180-க்கும் மேற்பட்ட சுகாதார […]

error: Content is protected !!