இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக ஷுப்மான் கில் நியமிப்பு – வெளியான காரணம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் சர்வதேச (ODI) தலைவர் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, இளம் வீரர் சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக கில்லை கேப்டனாக நிலைநிறுத்த போதுமான அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்தார். கில் தலைமையிலான இந்தியாவின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடராகும். இது ஒக்டோபர் 19 ஆம் திகதி தொடங்குகிறது. […]













