வாழ்வியல்

ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கும் மனச்சோர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • October 8, 2025
  • 0 Comments

ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவில் மனச்சோர்வு ஏற்படுவதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நிபுணர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆண்களை விட பெண்களின் மரபணுவில் மனச்சோர்வை ஏற்படுத்தும் பங்கு இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 2 லட்சம் பேரின் மரபணுவை அடிப்படையாகக் கொண்டு, குயின்ஸ்லாந்தின் QIMR பெர்கோபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. இதில், இருபாலினருக்கும் பொதுவான 7,000 மரபணு மாற்றங்களும், பெண்களை மட்டும் பாதிக்கும் 6,000 […]

உலகம்

இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்ட காசாவை மீட்க 25 ஆண்டுகள் ஆகலாம்

  • October 8, 2025
  • 0 Comments

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களால் நிர்மூலமாகியுள்ள காசவை மீட்க சுமார் 25 வருடங்கள் வரை செல்லலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. போர் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகளும், அதன் விவசாய நிலங்களின் வளத்தை மீட்டெடுக்க 25 ஆண்டுகளும் தேவைப்படலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு இடையே போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவ்வாறான நிலையில் ஐக்கிய […]

உலகம் செய்தி

உச்சம் தொட்ட தங்கத்தின் புதிய விலை – ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலர்

  • October 8, 2025
  • 0 Comments

உலக சந்தையின் வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. சமகாலத்தில் அரசியல் செயற்பாடு, உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலைமை காரணமாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியமையினால் சடுதியாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பங்கு சந்தைகளில் தொடர்ந்து காணப்படும் நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம், வட்டிவீதங்களின் மாற்றங்கள் உள்ளிட்டவை தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன. பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளமையினால் […]

விளையாட்டு

ICC மகளிர் உலகக் கோப்பை – புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி

  • October 8, 2025
  • 0 Comments

ICC மகளிர் உலகக் கோப்பையின் மற்றொரு முக்கியமான போட்டி நேற்று நடைபெற்றது. அதற்கமைய, புள்ளிப் பட்டியலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பங்களாதேஷ் மகளிர் அணிக்கும் இங்கிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி அடித்த 178 ரன்களைத் துரத்திய இங்கிலாந்து அணி, 23 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இதன் விளைவாக, புள்ளிகள் அட்டவணை […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

வட்ஸ்அப் செயலியில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் – பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

  • October 8, 2025
  • 0 Comments

உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்ட வட்ஸ்அப் செயலியில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, மெட்டா நிறுவனம் புதிய ஏஐ அம்சங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய அப்டேட்களில், செட் தீம்களை ஏஐ மூலம் தனிப்பயனாக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் செயலியில் இருந்தபடியே புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் பின்னணியை (Background) மாற்றும் வசதிகள் அடங்கும். இந்த அம்சங்கள் விரைவில் உலகளவில் அறிமுகமாகவுள்ளன என மெட்டா தெரிவித்துள்ளது. இந்தியாவில் ‘அரட்டை’ போன்ற மெய்செய்தி செயலிகள் […]

இலங்கை

இலங்கையில் சீரற்ற காலநிலை – சுகாதாரப் பிரிவினர் விடுத்த எச்சரிக்கை

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெங்கு நோய் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாட்டில் 39,401 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டெங்குவால் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என நிபுணர் தெரிவித்தார். ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 431 […]

இந்தியா

இந்தியாவில் மண்ணுக்குள் புதைந்த பேருந்து – தொடரும் மீட்புப் பணி – அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

  • October 8, 2025
  • 0 Comments

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் மண் சரிவில் சிக்கிய பேருந்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விபத்து நடந்தபோது பேருந்தில் 30 முதல் 35 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை மூன்று பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மலையின் பாரிய மண்மேடு பேருந்தின் மீது சரிந்து வீழ்ந்தமையினால் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் […]

உலகம்

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கனடியர்

  • October 8, 2025
  • 0 Comments

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மது அருந்திய நிலையில் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான கனேடியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் தகவலின்படி, 5ஆம் திகதி காலை சுமார் 9.20 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பயண அனுமதிச் சீட்டையும், கடவுச்சீட்டையும் காண்பிக்குமாறு கோரிய போது, குடிவரவு அதிகாரிகளிடம் பலமுறை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் அவர் அதிகாரிகளின் […]

உலகம்

அமெரிக்க விமான நிலையங்களில் உச்சக்கட்ட நெருக்கடி நிலை – 6,000 விமானங்கள் தாமதம்

  • October 8, 2025
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கத்தால் பல நாடுகளுக்கு செல்லும் 6,000 க்கும் மேற்பட்ட விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு தாமதமாகி உள்ளன. மேலும் சில விமான நிலையங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டென்வரைச் சுற்றியுள்ள முக்கிய விமான நிலையங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டன. லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹொலிவுட் பர்பேங்க் விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு வசதி ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திங்கள்கிழமை பிற்பகல் முதல் மாலை வரை […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

குடிநுழைவு விதிகளை கடுமையாக்கிய ட்ரம்ப்! விசா பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

  • October 8, 2025
  • 0 Comments

அமெரிக்கா வழங்கும் மாணவர் விசாக்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒகஸ்டில் மாணவர் விசா அளவுகள் சுமார் 20 சதவீதம் குறைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வீழ்ச்சிக்கு டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடிநுழைவு விதிகளே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்கள் நேர்காணலுக்காக பதிவு செய்ய வேண்டிய புதிய நடவடிக்கைகள், சமூக ஊடக கணக்குகளை சரிபார்ப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விசா கிடைப்பதை சிக்கலாக்கியுள்ளன. கடந்தாண்டில் […]