இலங்கை

11 மாதங்களுக்குள் சிக்கிய பெருமளவு போதைப் பொருட்களின் அளவு அறிவிப்பு!

  • November 11, 2025
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (11) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், இக்காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் அளவையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டார். இதற்கமைய 2025 ஜனவரி முதல் இதுவரையில் ஆயிரத்து 493 கிலோ ஹேரோயின் போதைப்பொருளும், 15 ஆயிரத்து 500 கிலோ கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், 32 கிலோ […]

செய்தி

பிரதான எதிர்க்கட்சிக்குள் அதிருப்தி – இந்தியப் பயணத்தில் எம்.பி.க்களை உள்வாங்காத சஜித்

  • November 11, 2025
  • 0 Comments

கட்சி தலைவர் சஜி பிரேமதாசவின் இந்திய பயணம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். தனது புதுடெல்லி பயணத்தின்போது கட்சி எம்.பிக்களை சஜித் உள்வாங்காமை தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், சஜித்தின் புதுடெல்லி பயணம் அதிகாரப்பூர்வ இராஜதந்திர விஜயமா என கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “அது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு […]

இலங்கை

மீண்டும் 8000 ரூபாவால் அதிகரித்தது தங்கத்தின் விலை!

  • November 11, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்து இலங்கையிலும் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 8000 ரூபாயால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கொழும் ஹெட்டி வீதி தங்க நிலவரங்களுக்கு அமைய, 22 காரட் பவுண் ஒன்றின் விலை 7000 ரூபாவால் அதிகரித்து மூன்று இலட்சத்து 600 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமை  293,200 ஆகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 325,000 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமை […]

பொழுதுபோக்கு

ஜாய் கிரிசில்டாவின் விவாகரத்துக்கு காரணமே ரங்கராஜ் தான்…

  • November 11, 2025
  • 0 Comments

ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா பற்றிய சர்ச்சைகள் நாளுக்கு நாள் பல புதி தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இதை தெரிந்துகொள்வதில் மக்களுக்கு அதிக ஆர்வம் இருக்கத்தான் செய்கின்றது. ஜாய் கிரிசில்டாவை, மாதம்பட்டி திருமணம் செய்து கொண்டது, குழந்தை பிறந்தது, வீடியோ, செட், மற்றும் ரங்கராஜனின் முதல் மனைவி வெளியிட்ட கடிதம் என நாளுக்கு நாள் இவர்களது விடயங்கள் பெரிதாகிக்கொண்டே செல்கின்றது. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், ஜாய் தன்னுடைய முதல் கணவர் ஜெ ஜெ ஃபெட்ரிக்கை விவாகரத்து […]

உலகம்

பிபிசிக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப் – ஆவணப்படம் விவகாரத்தில் சட்ட நடவடிக்கை

  • November 11, 2025
  • 0 Comments

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். பிபிசியின் பனோரமா ஆவணப்படத்தில் தனது உரை திரித்துப் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விமர்சனத்தை எதிர்கொண்டு, பிபிசி பொது இயக்குநர் டிம் டேவி மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டெபோரா டர்னஸ் (Deborah Turness) ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்தனர். கேள்விக்குரிய ஆவணப்படத்தை முழுமையாகவும் நியாயமாகவும் திரும்பப் பெறுவதற்கு […]

இலங்கை

மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சுவதாக ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

  • November 11, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வரவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில், மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் சட்டம் இயற்றி கொடுப்பதற்கு நாடாளுமன்றம் தயாராகவே உள்ளது. பழைய முறைமையின்கீழ் தேர்தலை நடத்தலாம். ஆனால் கூட்டுறவு தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால், மாகாணசபைத் […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் வரலாறு காணாத கடும் குளிர் ஏற்படும்! விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

  • November 11, 2025
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் வழக்கத்திற்கு மாறான வகையில் கடும் குளிரான காலநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களில் இல்லாத அளவு மிகவும் குளிரானதாகவும், கடுமையானதாகவும் இருக்கும் என ருமேனியாவின் வானிலை மற்றும் நீர்வளவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் புவி வெப்பமயமாதலால் (புவி வெப்பமடைதலால் அல்ல) இலேசான குளிர்காலங்கள் நிலவியது. எனினும், இந்த ஆண்டு நிலைமை மாற வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பலவீனமடையும் துருவச் சுழல் காரணமாக ஐரோப்பா முழுவதும் வழக்கத்திற்கு மாறாகக் குளிர் மற்றும் பனிமூட்டமான […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களுக்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

  • November 11, 2025
  • 0 Comments

சர்வதேச மாணவர்களின் சேர்க்கை கல்வி நிறுவனங்களின் அளவுக்கு ஏற்ப நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கும் நோக்கில் புதிய அமைச்சரவை வழிக்காட்டுதலை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய புதிய வழிகாட்டுதல்கள் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அமைச்சரவையின் பழைய வழிகாட்டுதல் 111 மாற்றி இந்த 115 ஆவது வழிகாட்டுதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய விதியானது பிராந்திய மற்றும் […]

இலங்கை

பாப்பரசர் லியோ இலங்கைக்கு வர வாய்ப்பு – வத்திக்கான் உயர் தூதுவர் தகவல்

  • November 11, 2025
  • 0 Comments

பாப்பரசர் லியோ இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்குரிய சாத்தியம் இருப்பதாக தெரியவருகின்றது. வத்திக்கான் உயர் தூதுவர் ஒருவரை மேற்கோள்காட்டி கத்தோலிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கும், வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. இதனையொட்டி வத்திக்கான வெளிவிவகார அமைச்சர் போல் ரிச்சர்ட் கல்லாகர், கடந்த 3ஆம் திகதி கொழும்புக்கு பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தியபோது, அமைதி மற்றும் உறுதித்தன்மையை நோக்கிய, இலங்கையின் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் வகையில், […]

செய்தி

நுகேகொடை பேரணி புறக்கணிப்பு? ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு

  • November 11, 2025
  • 0 Comments

நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணி தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதென உள்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இப்பேரணியில் பங்கேற்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் எடுத்துள்ளது. இது பற்றி ஏற்பாட்டாளர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பேரணியில் பங்கேற்க வேண்டுமெனவும், கட்சி முடிவு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தி விட்டுக்கொடுப்பு […]