ஏர் இந்தியா விமான விபத்து : விமானத்தின் என்ஜின்கள் இரண்டும் புதியதா? – புதிய தகவல்!
270 பேர் உயிரிழக்க காரணமாக ஏர் இந்திய விமான விபத்து இயந்திர கோளாறால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இது குறித்த மேலதிக விபரங்களும் வெளியாகியுள்ளன. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இயந்திரம் புதியது, மற்றொன்று டிசம்பர் வரை பழுதுபார்க்கப்பட வேண்டியிருந்தது என்று விமான நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். இந்திய செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் “சுத்தமான” வரலாற்றைக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். “வலது இயந்திரம் மார்ச் 2025 இல் பொருத்தப்பட்ட […]













