உலகின் முதல் மனிதச் சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சை வெற்றி – அமெரிக்காவில் மருத்துவர்கள் சாதனை
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உலகின் முதல் மனிதச் சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது . மே 4ஆம் திகதி ரோனல்ட் ரீகன் மருத்துவ நிலையத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. கடும் சிறுநீர்ப்பை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அந்தச் சிகிச்சை ஒரு நற்செய்தியாக மாறியுள்ளது. 41 வயது ஓஸ்கார் லரென்ஸாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் சிறுநீர்ப்பையின் பெரும் பகுதியை இழந்தார் ஓஸ்கார். பிறகு புற்றுநோயால் அவருடைய இரு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டன. […]













