மியான்மரில் சைபர் அடிமைத்தனத்தில் தள்ளப்பட்ட 60 இந்தியர்கள் மீட்பு; மகாராஷ்டிராவில் 5 முகவர்கள் கைது
இந்திய இணையக் குற்றத் தடுப்பு அதிகாரிகள் மியன்மாரிலிருந்து 60 இந்திய நாட்டவரைக் காப்பாற்றியுள்ளனர்.அந்த இந்தியர்கள், நல்ல வேலை வழங்கப்படும் என்று கூறி ஈர்க்கப்பட்டு இணைய அடிமைகளாக இயங்கவைக்கப்பட்டனர். அத்தகையோர் வலுக்கட்டாயமாக இணையக் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுவர்.இதன் தொடர்பில், இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலக் காவல்துறையின் இணையப் பிரிவினர் ஐந்து முகவர்களையும் கைது செய்தனர். அவர்களில் வெளிநாட்டவர் ஒருவரும் அடங்குவார். பாதிக்கப்பட்டவர்கள், தாய்லாந்திலிருந்து மியன்மாருக்குக் கொண்டு செல்லப்பட்டு பல்வேறு முதலீட்டு மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. மோசடிக்காரர்கள், சமூக ஊடகங்களின் மூலம் […]













