இலங்கையில் உப்பின் விலை 180 ரூபாய் வரை அதிகரிக்கக் கூடும்
இலங்கையில் இம்மாதம் உப்பின் விலையும் அதிகரிக்கக் கூடும் என அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத் தலைவர் டீ.கே.நந்தன திலக தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதில் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதால் விலை அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 120 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் உப்பு பக்கெட்டின் விலை 180 ரூபாவாகவும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய சீரற்ற காலநிலை காரணமாக உள்ளுர் உப்பளங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து […]













