இலங்கையில் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. 40 வீதத்திற்கும் அதிகமான அதிகாரிகளுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தால் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டமையால் இந்த நிலைமை ஏற்பட்டதாக அவர் கூறினார். இதன் காரணமாக நோயாளர்களின் சிகிச்சை மற்றும் பரிசோதனை நடவடிக்கைள் தாமதமடைந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த […]













