ஐரோப்பா

பிரித்தானியாவில் தபால் வாக்களிப்பில் எழுந்துள்ள புதிய சிக்கல்!

  • July 2, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், சிலருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் அவசரமாக ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. கன்சர்வேடிவ் மந்திரி மரியா கால்ஃபீல்ட், மக்கள் இன்னும் தபால் வாக்குகளைப் பெறாத “பல” தொகுதிகள் குறித்து தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான தபால் வாக்குகள் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே 90 க்கும் மேற்பட்ட தொகுதிகள் வாக்குச் சீட்டுகள் வராதது […]

ஆஸ்திரேலியா

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம் ; 14 வயதுச் சிறுவன் கைது

  • July 2, 2024
  • 0 Comments

சிட்னி பல்கலைக்கழகத்தில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து 14 வயதுச் சிறுவனை ஆஸ்திரேலியக் காவல்துறை கைது செய்துள்ளது. அவசரகாலக் குழுவினர் 22 வயது நபருக்கு முதலுதவி செய்ததாகவும் பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலக் காவல்துறை தெரிவித்தது.கடுமையாகக் காயமடைந்த அந்த நபர் சீரான உடல்நிலையுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அது கூறியது. இச்சம்பவத்தை அடுத்து பொதுமக்களுக்கு அபாயம் ஏதுமில்லை என்று காவல்துறை குறிப்பிட்டது. சிட்னி பல்கலைக்கழகத்தின் கேம்பர்டவுன் வளாகத்தில் நடந்த சம்பவம் குறித்துக் காவல்துறை […]

புகைப்பட தொகுப்பு

கருப்பு ரோஜாவாக காஜல் அகர்வால்… இணையத்தை ஆக்கிரமிக்கும் புதிய போட்டோஸ்

  • July 2, 2024
  • 0 Comments

கடந்த 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் காஜல் அகர்வால். அதன் பின் விஜய், அஜித், தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். தற்போது காஜல் அகர்வால் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இவருக்கு ஒரு நல்ல கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு […]

செய்தி

உருகுவே சென்ற Air Europa விமானம் நடுவானில் ஆட்டங்கண்டதில் பலர் காயம்

  • July 2, 2024
  • 0 Comments

மட்ரிட்டிலிருந்து உருகுவே தலைநகர் Montevideo-வுக்கு சென்றுகொண்டிருந்த Air Europa விமானம் நடுவானில் ஆட்டங்கண்டதில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர். Boeing 787-9 Dreamliner விமானத்தில் பயணிகள் 325 பேர் இருந்தனர். அந்த விமானம் பிரேசிலில் தரையிறக்கப்பட்டது. அங்கு அவசர மருத்துவ வாகனங்கள் தயாராக இருந்தன. 40 பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். காயமடைந்தவர்கள் ஸ்பெயின், அர்ஜெண்டினா, உருகுவே, இஸ்ரேல், பொலிவியா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இலங்கை செய்தி

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

  • July 2, 2024
  • 0 Comments

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படுகிறது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படுகிறது. இதன்படி, 5 […]

ஐரோப்பா

ரஷ்யாவில் 44,000 ஆண்டுகள் பழமையான உறைந்த ஓநாய் உடல் – பண்டைய வைரஸ்கள் தொடர்பில் ஆராய திட்டம்

  • July 2, 2024
  • 0 Comments

ரஷ்யாவில் 44,000 ஆண்டுகள் பழமையான உறைந்த ஓநாய் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓநாய் பண்டைய வைரஸ்கள் மற்றும் எதிர்கால மருந்துகளுக்கான தடயங்களைக் கொண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. ரஷ்யாவின் தொலைதூர வடகிழக்கு யாகுடியா பகுதியில், சுமார் 44,000 ஆண்டுகளாக குளிரில் உறைந்திருந்த ஓநாயின் உடலை உள்ளூர் விஞ்ஞானிகள் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். இதுபோன்ற கண்டுபிடிப்பு இதுவே முதல்முறை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில், இந்த ஓநாய் சடலம் யாகுடியாவின் அபிஸ்கி மாவட்டத்தில் உள்ளூர் மக்களால் […]

பொழுதுபோக்கு

ஓவர் தலைகனத்தில் ஆடும் உயர்ந்த நடிகை – எங்க போய் முடியப்போகுதோ?

  • July 2, 2024
  • 0 Comments

ஹீரோயின்கள் என்றாலே கொஞ்சம் கெத்து காட்டுவார்கள் தான். ஆனால் இதெல்லாம் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகைகளுக்கு பொருந்தும். ஆனால் எந்த படமும் ஓடாமல் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட நடிகை ஒருவர் ஓவர் ஆட்டம் போடுகிறாராம். உயர்ந்த நடிகையான இவர் நடிக்க வந்த வேகத்திலேயே பெரிய ஹீரோக்களின் படங்களில் கமிட்டானார். கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருந்த நடிகை சம்பள விஷயத்தில் கூட ரொம்ப கெடுபிடி காட்டாமல் இருந்தார். ஆனால் இதெல்லாம் ஆரம்ப காலத்தில் தான். […]

இலங்கை செய்தி

கொழும்பில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் இரா.சம்பந்தனின் பூதவுடல்

  • July 2, 2024
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் இன்றைய தினம் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. கொழும்பு – பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில், இன்று காலை 9மணி முதல் அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதேநேரம் நாளைய தினம் நாடாளுமன்றில் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவரது சொந்த […]

செய்தி வாழ்வியல்

அதிகம் பால் குடிப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • July 2, 2024
  • 0 Comments

பாலில் எந்த பால் நம் உடலுக்கு நல்லது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகம் முழுவதும் மக்கள் பலவிதமான பால்களை பயன்படுத்துகின்றனர் .அதில் ஆட்டுப்பால் ,மாட்டுப்பால், எருமை பால், ஒட்டகப் பால் ,கழுத பால் போன்றவற்றை பயன்படுத்திகின்றனர். அதில் முதலிடத்தில் பசும்பாலும் இரண்டாம் இடத்தில் எருமை பாலும் உள்ளது. பொதுவாகவே பாலில் கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்து உள்ளது. பசும்பால் Vs எருமைப்பால்; பசும் பாலை விட எருமை பாலில் புரதச்சத்தும் வைட்டமின்களும் அதிகம் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜோ பைடனுக்கு கடும் அழுத்தம்

  • July 2, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜனநாயக கட்சி அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவை இளைஞர் ஒருவருக்கு வழங்க வேண்டும் என 46% கட்சிப் பெரியவர்கள் தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புடனான சமீபத்திய விவாதத்தில் ஜோ பைடன் பின்வாங்கியுள்ளார். இந்த நிலையில், கட்சிக்குள் ஜனாதிபதி வேட்புமனு தொடர்பாக கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.