காசா தொடர்பாக அனைவரும் ‘விழிக்க வேண்டும்’ அழைப்பு விடித்துள்ள ஐ.நா அறிக்கையாளர்
பாலஸ்தீனம் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ், காசாவில் நடந்த அட்டூழியங்கள் குறித்து உலகெங்கிலும் உள்ள மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று புதன்கிழமை(03) அழைப்பு விடுத்துள்ளார். “ஜெர்மன் மக்கள், சக ஐரோப்பியர்கள், சக மனிதர்கள் – தயவுசெய்து, எழுந்திருங்கள்,” என்று அவர் வலியுறுத்தினார். காசாவில் இருந்து கடுமையாக காயமடைந்த 32 குழந்தைகளை வெளியேற்றுவதற்கு ஜேர்மன் மருத்துவர்கள் ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரது அறிக்கை வந்தது, ஆனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு […]













