ஆசியா

IMF-மிருந்து கடன் பெற எல்லா நிபந்தனைகளையும் பாகிஸ்தான் பூர்த்திசெய்துள்ளது – அமைச்சர் அலி பர்வேய்ஸ் மாலிக்

  • July 3, 2024
  • 0 Comments

பாகிஸ்தான், தனது பொருளாதாரத்தை மீட்க அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து ஆறு பில்லியன் டொலருக்கும் அதிகமான கடனுதவி பெறும் நம்பிக்கையுடன் இருக்கிறது. அதற்கான முதற்கட்ட ஒப்பந்தத்தை அனைத்துலகப் பண நிதிய ஊழியர்களுடன் செய்துகொள்ளும் முயற்சியில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கடனுதவியைப் பெற அனைத்துலகப் பண நிதியத்தின் நிபந்தனைகள் அனைத்தையும் பாகிஸ்தான் கருத்தில்கொண்டு இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தை வரைந்துள்ளதாக அந்நாட்டின் துணை நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான், வருவாய் ஈட்டுவதற்கு சவாலான இலக்குகளை வரவுசெலவுத் திட்டத்தில் வரைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது […]

கருத்து & பகுப்பாய்வு

உலகின் மிக ஆழமான நன்னீர் குகை : ஆய்வாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • July 3, 2024
  • 0 Comments

உலகின் மிக ஆழமான நன்னீர் குகையை ஆராயும் ஆய்வாளர்கள் இன்னும் கீழே இறங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். செச்சியாவின் மொராவியாவில் உள்ள ஹிரானிஸ் அபிஸ் குகை ஆய்வாளர்கள் நினைத்ததை விட ஆழமானதாக கூறப்படுகிறது. டெத் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஒரு ட்ரோனை குறைத்த குகைக்குள் அனுப்பி   ஆய்வாளர்கள் தனது பணிகளை முன்னெடுத்துள்ளனர். ட்ரோனானது அதிகபட்ச ஆழமான 1,476 அடியை எட்டியபோது வேலை செய்வதை நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ட்ரோன் அடிமட்டத்தை அடைவதற்கு பல மைல்கள் இருக்கலாம் என்று […]

ஐரோப்பா

ரஷ்யாவுடன் சமரசம் செய்ய தயாராக இல்லை: உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொள்ள உக்ரைன் தயாராக இல்லை, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்று உக்ரைன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரியான ஆண்ட்ரி யெர்மக், வாஷிங்டனுக்கு விஜயம் செய்த போது செய்தியாளர்களிடம், போரில் “நியாயமான அமைதியை” எவ்வாறு அடைவது என்பது குறித்த எந்த ஆலோசனையையும் கியேவ் கேட்கும் என்று கூறினார். ஜனாதிபதி ஜோ பிடனுக்கு சவால் விடுக்கும் குடியரசுக் கட்சி […]

ஐரோப்பா

இலங்கையில் பாடசாலை கல்விக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை!

  • July 3, 2024
  • 0 Comments

பாடசாலைக் கல்வியின் போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கல்விக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஒழுக்கத்துடன் பணியாற்றுங்கள். ஒழுக்கம் இல்லாமல் கல்விச் சேவையை நடத்த முடியாது. கடந்த காலங்களில் நடந்த வேலை நிறுத்தம், பள்ளிகளில் நடக்கும் வேலை நிறுத்தம் சரியில்லை. […]

பொழுதுபோக்கு

சூர்யாவை இறுதியாக விக்ரம் படத்தில் பார்த்தது… ஏங்கும் ரசிகர்களுக்கு இதோ குட் நியுஸ்

  • July 3, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 5 நிமிடங்கள் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் குறித்து உறையடும்போடு எல்லாம் தவிர்க்க முடியாத கதாபாத்திரமாக அது அமைந்தது. இவரது படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இவரது நடிப்பில் பிரமாண்டமான பொருட்செலவில் கங்குவா படம் உருவாகி வருகின்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் […]

முக்கிய செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்

மறைந்த தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின் புகலுடல் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தனின் புகழுடலுக்கு சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிக் கிரியைகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து பணிப்புரைகளையும் பிரதமர் தினேஷ் குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். மேலும் சம்பந்தனின் புகழுடலுக்கு எதிர்வரும் (07.07.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை இந்துமயானத்தில் […]

பொழுதுபோக்கு

ஷாலினிக்கு திடீர் ஆப்பரேஷன்! பதறியடித்து வந்த அஜித்

  • July 3, 2024
  • 0 Comments

நடிகர் அஜித் குமார் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்காக மீண்டும் அஜர்பைஜான் சென்ற நிலையில், மனைவி ஷாலினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் பதறியடித்து அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்துள்ளார். மருத்துவமனையில் அஜித் ஷாலினியின் கையை பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக நடிகர் அஜித்துக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், நடிகை ஷாலினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. நடிகர் […]

ஆசியா

விரைவில் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலிய பிரதமர் இடையே சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஜூலை மாத இறுதியில் வாஷிங்டனில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இஸ்ரேலிய தலைவர் காசாவில் தனது நாட்டின் போர் குறித்து அமெரிக்க காங்கிரஸில் உரையாற்ற வருவார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நெதன்யாகு ஜூலை 24 ஆம் திகதி வாஷிங்டன் விஜயத்தின் போது அமெரிக்க காங்கிரஸில் உரையாற்ற உள்ளார். அவர் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டின் கூட்டு அமர்வில் பேசுவார் என அறிவிக்கபப்ட்டுள்ளது. காசாவில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 12 வயது சிறுவன் மாயம்… முதலை தாக்குதல் தொடர்பில் அச்சம்!

  • July 3, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் ‘நார்தன் டெரிட்டரி’ மாநிலத்தில் சிறுவர் ஒருவரைக் காணவில்லை. அவரை முதலை இழுத்துச் சென்றிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அந்த 12 வயது சிறுவன், ஆஸ்திரேலிய நேரப்படி ஜூன் 2ஆம் திகதி மாலை ஙான்மரியாங்கா நகருக்கு அருகில் நீந்திக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சிறுவரை முதலை தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரைத் தேடி மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ‘நார்தன் டெரிட்டரி’ மாநிலத்தில் ஏறத்தாழ 100,000 உப்புநீர் முதலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வேறு எந்த இடத்திலும் இவ்வளவு உப்புநீர் முதலைகள் […]

ஆசியா

தைவானின் மீன்பிடிக் கப்பலை முற்றுகையிட்ட சீன கடற்படையினர்!

  • July 3, 2024
  • 0 Comments

சீனாவிற்கும் – தைவானுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், சீன கடற்படையினரின் தைவானுக்கு சொந்தமான மீன்பிடிக் கப்பலில் வலுக்கட்டாயமாக ஏறியுள்ளனர். சீன நிலப்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தைவான் ஜலசந்தியில் உள்ள கின்மென் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நியைில் தைவான், தைபே தீவுகளைச் சுற்றியுள்ள நீரில் ஒரு விலக்கு மண்டலத்தை உருவாக்கி, சீனக் கப்பல்கள் நுழைவதைத் தடை செய்துள்ளது. பெய்ஜிங் அதிகாரப்பூர்வமாக விலக்கு மண்டலத்தை அங்கீகரிக்கவில்லை, இருப்பினும் […]