இலங்கை செய்தி

மேயர் பதவி நீக்கம் – வவுனியாவில் போராட்டம்

வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா மாநகர சபை மேயர் பதவியிலிருந்து சு.காண்டீபன் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வடக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்தும் வவுனியாவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா – பண்டாரவன்னியன் சதுக்கத்துக்கு முன்பாக ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கிருந்து மன்னார் வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று காமினி மகா வித்தியாலயம் முன்பாக நின்று ஆளுநருக்கு எதிராகக் கடுமையான கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களின் கைகளில்,

”ஆளுநரே ஜனநாயகப் படுகொலையை நிறுத்து”,

”ஜே.வி.பியின் முகவராக ஆளுநரே செயற்படாதே”,

”மக்கள் ஆணைக்கு மதிப்பளி”, ”தையிட்டியில் பாராமுகம், மாநகர சபையில் பழிவாங்கலா?”, ”ஊழல் அறிக்கையை வெளிப்படுத்து” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை