செய்தி

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் கைது

  • April 2, 2024
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு வருகைத் தந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலிருந்து நாட்டுக்கு வருகைத் தந்த குறித்த இளைஞன், மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளார். இதன்போதே அவர் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக […]

செய்தி

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நாளை இலங்கை அழைத்துவரப்படுகின்றனர்

  • April 2, 2024
  • 0 Comments

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நாளை காலை நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர். அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி இதனை உறுதிப்படுத்தினார். இதன்படி நாளை முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும்  சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை […]

இலங்கை செய்தி

யாழ்.புறநகர் பகுதியில் வாள்வெட்டு கும்பல் மோதல்!! 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

  • April 2, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 22 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்களுக்கு இலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர் வைத்தியசலையில் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் அனுமதிக்கப்பட்டமையால் , வைத்தியர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் , அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் , வைத்தியசாலையினுள்ளும் மோதல் போக்குடன் காணப்பட்டதுடன் , மோதலில் ஈடுபடவும் முயன்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் கர்ப்பிணிப் பெண் மற்றும் கணவர் பலி

  • April 2, 2024
  • 0 Comments

உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் வேகமாக வந்த டிரக் அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் இறந்தனர், அவர்களின் 2 வயது மகள் பலத்த காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். ஜின்ஜானா பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 30 வயதான இம்ரான் , எட்டு மாத கர்ப்பிணியான 28 வயது மனைவி ஜிந்தி மற்றும் அவர்களது மகள் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் அவர்களது […]

விளையாட்டு

IPL Match 15 – பெங்களூரு அணி தோல்வி

  • April 2, 2024
  • 0 Comments

ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டிகாக் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டோப்லி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து […]

இலங்கை செய்தி

ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க முடியாது – நீதிமன்றம் உத்தரவு

  • April 2, 2024
  • 0 Comments

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபண்டிகே இந்த தீர்ப்பை வழங்கினார். தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு பிணை வழங்குவதற்கான குறிப்பிட்ட உண்மைகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தீர்ப்பை அறிவித்த நீதிபதி தெரிவித்தார். ஞானசார தேரர் தமக்கு விதிக்கப்பட்டுள்ள […]

உலகம் செய்தி

தூதரகத்தின் மீதான தாக்குதல்!! ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

  • April 2, 2024
  • 0 Comments

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீதான தாக்குதல் தொடர்பாக ஈரான் மற்றும் ஹெஸ்புல்லா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. நேரத்தைப் பொறுத்து எதிர் தாக்குதல் நடத்தப்படும் என்று சிரியாவுக்கான ஈரான் தூதர் கூறுகிறார். இஸ்ரேலின் கோழைத்தனமான செயலுக்கு தகுந்த நடவடிக்கைகளுடன் பதிலடி கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லாவும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது. சிரியா மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் பணம் கொடுக்க வேண்டும் என்றும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஹெஸ்புல்லா […]

பொழுதுபோக்கு

நம்பர் நடிகைகளையே டீலில் விட்ட விவாகரத்து நடிகை! ஐயோ… வட போச்சே

  • April 2, 2024
  • 0 Comments

சின்ன நம்பர் நடிகைக்கும் பெரிய நம்பர் நடிகைக்கும் தான் எப்போதும் குழாயடி சண்டையாக இருக்கும். அதில் பெரிய நம்பர் தான் வெற்றிவாகை சூடி வந்தார். ஆனால் இப்போது அவரை சின்ன நம்பர் நடிகை ஓவர் டேக் செய்து விட்டார். தற்போது மாமியின் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. கிட்டத்தட்ட பெரிய நம்பர் நடிகையின் பட்டத்தை இவர் தட்டிப் பறித்து விட்டார் என்றே சொல்லலாம். ஆனால் போட்டிக்கு நானும் வரலாமா என களத்தில் குதித்திருக்கிறார் விவாகரத்து நடிகை. தற்போது […]

பொழுதுபோக்கு

ஏப்ரலுக்கு வருகின்றது GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்… அப்டேட்களை அள்ளி வீசும் படக்குழு

  • April 2, 2024
  • 0 Comments

தளபதி தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் பிஸியாக உள்ளார். இதுவரை இல்லாத அம்சத்துடன் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சயின்ஸ் பிக்சன் மற்றும் ஆக்சன் கதையில் நடித்து வருகிறார் தளபதி. கிளைமாக்ஸ் காட்சி கேரளாவில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் படமாக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது கோட் பட குழுவினர் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல உள்ளனர். தமிழக அரசியலில் கால் பதித்திருப்பதால் இவரது படங்கள் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி வருகிறது. தினம் தினம் புது புது […]

இந்தியா செய்தி

கேரளாவில் பயணியால் தள்ளப்பட்ட டிக்கெட் பரிசோதகர் உயிரிழப்பு

  • April 2, 2024
  • 0 Comments

மத்திய கேரள மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணியால் தள்ளப்பட்டதாகக் கூறப்படும் பயண டிக்கெட் பரிசோதகர் உயிரிழந்துள்ளார். திருச்சூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலப்பய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலியானவர் எர்ணாகுளத்தைச் சேர்ந்த கே வினோத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, கே வினோத், தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட பயணியால் தள்ளப்பட்டுள்ளார். எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா நோக்கிச் சென்ற ரயிலில் இந்த […]