ஐரோப்பா

இத்தாலியில் சுப்பர் மார்க்கெட் கட்டுமான தளத்தில் விபத்து – மூவர் பலி – மூவர் மாயம்

  • February 17, 2024
  • 0 Comments

இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் சுப்பர் மார்க்கெட் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் மூன்று தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்டுமானத்தில் இருந்த சுப்பர் மார்க்கெட்டின் ஒரு பகுதி தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காணாமல் போன தொழிலாளர்களை மீட்கும் பணியை மீட்புக் குழுவினர் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தின் போது எட்டு தொழிலாளர்கள் உட்பட சுமார் 50 பேர் அங்கிருந்ததாக வெளிநாட்டு செய்திகள் […]

உலகம் செய்தி

நாவல்னி உயிரிழப்பு – புட்டின் தான் பொறுப்பு – பைடன் குற்றச்சாட்டு

  • February 17, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நாவல்னி சிறையில் உயிரிழந்ததற்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தான் பொறுப்பு என கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இது தொடர்பில் கண்டனம் தெரிவித்துள்ளார். புட்டின் ஊழல்களுக்கும், அராஜகச் செயல்களுக்கும் எதிராகத் துணிந்து குரல் கொடுத்தவர் நாவல்னி என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அவருடைய மரணம் வியப்பளிக்கவில்லை என்ற போதும் கோபத்தைத் தூண்டியிருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 47 வயதான நாவல்னி 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். […]

வாழ்வியல்

கொழுப்பைக் குறைக்கும் 5 உணவுகள்!

  • February 17, 2024
  • 0 Comments

இன்றைய காலத்தில் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை முற்றிலும் மோசமாக மாறிவிட்டது. இதனால் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து உடல் எடையை எக்குத்தப்பாகக் கூட்டி விடுகிறது. என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் இந்த கொழுப்பு, உடலை விட்டு போவதில்லை. எனவே உங்களது உணவு முறையை மாற்றி, கொழுப்பைக் குறைக்கும் முயற்சியில் இப்போதே இறங்குங்கள். உங்கள் உடலில் உள்ள கெட்ட விஷயங்களை நீக்கி ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டிய நேரம் இது. சரி வாருங்கள் இந்த பதிவில் உடலில் உள்ள கொழுப்பை […]

இலங்கை

இலங்கையில் அஸ்வெசும விண்ணப்பிக்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

  • February 17, 2024
  • 0 Comments

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நலன்புரி நன்மைகள் சபை இதனை தெரிவித்துள்ளது. ஒரே நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். முதற்கட்டத்தின் கீழ் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

செய்தி மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

எல்லையில் பிரமாண்ட சுவர் கட்டி வரும் எகிப்து!

  • February 17, 2024
  • 0 Comments

எகிப்து தனது எல்லையில் சுவர் எழுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. காஸாவிலிருந்து வரும் பாலஸ்தீன அகதிகளின் வருகையைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் எகிப்தின் சினாய் தீபகற்பப் பகுதியில் குடியேறி வருகின்றனர். இந்நிலையில் அகதிகளின் வருகையைத் தடுக்கும் வகையில் எல்லைப் பகுதியில் 23 அடி உயரத்திற்கு பிரமாண்ட சுவரை எகிப்து எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. எகிப்தின் சுவர் கட்டும் திட்டத்திற்கு […]

செய்தி விளையாட்டு

3 வது டெஸ்ட்டிலிருந்து திடீரென விலகிய ரவிச்சந்திரன் அஸ்வின்

  • February 17, 2024
  • 0 Comments

ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இருந்து விலகியுள்ளார்,அவரது குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மருத்துவ தேவையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ள பிசிசிஐ இந்த சவாலான காலங்களில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) அணியும் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கிறது. அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிசிசிஐ தனது இதயப்பூர்வமான ஆதரவை வழங்குகிறது. வீரர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மிகவும் முக்கியமானது. இந்த சவாலான […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் விமானத்தில் பயணித்தவர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் விசேட அறிவிப்பு

  • February 17, 2024
  • 0 Comments

மெல்போர்னில் இருந்து அடிலெய்டு செல்லும் விமானத்தில் குழந்தை ஒன்றுக்கு தட்டம்மை இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அறிகுறிகளைக் கண்டறியுமாறு பயணிகளை சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டு தெற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தட்டம்மை நோயாளி சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஒரு வயது குழந்தையாகும். ஆஸ்திரேலியா முழுவதும் அம்மை நோய் பரவி வரும் வேளையில், அடிலெய்டில் இந்த குழந்தைக்கு இந்த நோய் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

அறிமுகமாகும் OpenAI SORA – இனி கணப்பொழுதில் வீடியோ உருவாக்கலாம்

  • February 17, 2024
  • 0 Comments

OpenAI நிறுவனத்தின் அடுத்த படைப்பாக Sora என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நீங்கள் என்ன Text உள்ளிடுகிறீர்களோ அதற்கு ஏற்றவரான ஒரு நிமிட வீடியோவை உடனடியாக உருவாக்கிக் கொடுத்துவிடும். இந்த புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் குறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள OpenAI CEO சாம் அல்ட்மேன், “Sora AI என்ன செய்யும் என்பதை நாங்கள் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறோம். நீங்கள் எதுபோன்ற காணொளிகளைப் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த […]

ஐரோப்பா

பிரான்ஸின் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • February 17, 2024
  • 0 Comments

பிரான்ஸின் இவ்லின் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெப்ரவரி 12 ஆம் திகதி மாலை 6.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 21 வயதுடைய பெண் ஒருவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவருக்கு பின்னால் சென்று அவரை கட்டியணைத்து கீழே விழுத்தி, அவரை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார். தாக்குதல் மேற்கொண்ட 26 வயதுடைய குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான பெண் பொலிஸார் வழக்கு […]

ஆசியா

சிங்கப்பூர் மக்களுக்கு கிடைக்கவுள்ள வாழ்க்கைச் செலவினச் சிறப்புத் தொகை

  • February 17, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவினச் சிறப்புத் தொகையையும் அரசாங்கம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணத்திற்கு தகுதி பெறும் சிங்கப்பூரர்கள் 200 வெள்ளி முதல் 400 வெள்ளி வரை ரொக்கம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பெறுவதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன. இருபத்தொரு வயதை அடைந்த குடிமக்களாக அவர்கள் இருக்கவேண்டும். அவர்களின் ஆண்டு வருமானம் நூறாயிரம் வெள்ளிக்குள் இருப்பதோடு. அவர்களிடம் ஒரு சொத்துக்கு மேல் இருக்கக்கூடாது.

error: Content is protected !!