இந்தியா

4 மாத குழந்தை படைத்த உலக சாதனை: நெகிழ்ச்சியில் பெற்றோர்கள்

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாதக் குழந்தை நோபல் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த குழந்தை மிகச்சிறிய வயதிலேயே காய்கறி, பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என 120 வெவ்வேறு கொருட்களை அடையாளம் காணும் திறனால் இந்த சாதனையை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைவல்யாவின் தாய் ஹேமா, தனது குழந்தையின் சிறப்புத் திறனைக் கண்டு, அதை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். குடும்பத்தினர் கைவல்யாவின் திறமைகளை வெளிப்படுத்தும் […]

தமிழ்நாடு

விருதுநகர்-10 பேரின் உயிரைப் பறித்த பட்டாசு ஆலை வெடிவிபத்து… ஒருவர் கைது; இருவருக்கு வலைவீச்சு

  • February 18, 2024
  • 0 Comments

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலையின் போர்மேனை கைது செய்துள்ள பொலிஸார் மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமதேவன்பட்டி கிராமத்தில், பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில், 55 அறைகளில் 150 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு […]

உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • February 18, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பால்க் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மதிப்பு ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தி

இராணுவ வீரர்கள் நீளமாக முடி வளர்க்க அனுமதி

இராணுவத்தில் புதிதாக இணைபவர்கள் நீளமாக முடி வளர்ப்பதற்கு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் குறித்த புதிய நடைமுறை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், புதிய விதிகளின்படி பெண்களும் நீண்ட கூந்தலை வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சீருடையில் இருக்கும் போது தோள்களில் கூந்தல் விழ முடியாது – மற்றும் ஹெல்மெட் அணிவதில் தலையிடாதவாறு இருக்க வேண்டும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் வட கொரியா பற்றிய கவலைகள் அதிகரித்து வரும் […]

இலங்கை

அரையிறுதிக்கு தெரிவாகிய முல்லை மாவட்ட உதைபந்தாட்ட அணி.

  • February 18, 2024
  • 0 Comments

Friendship challenge Trophy Football Tournament ஆல் நடத்தும் அணிக்கு பதினொரு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் காலிறுதி போட்டி நேற்றையதினம் (17.02.2024) யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. முதலாவது காலிறுதிப் போட்டியில் யாழ் லீக் மற்றும் முல்லை லீக் அணிகள் மோதியிருந்தது. இடைவேளையின் பின்னரான ஆட்டம் விறுவிறுப்பை பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல்கணக்கில் சமநிலையில் போட்டி முடிவடைந்தது. சமனிலை தவிர்ப்பு உதை முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் […]

பொழுதுபோக்கு

ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்; அதிதி போட்ட புகைப்படம்

  • February 18, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி சங்கர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய அக்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் வீரர் ரோஹித்துடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் ரோஹித் நடத்தி வரும் கிரிக்கெட் கோச்சிங் சென்டரில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட தொல்லைகள் குறித்து புகார்கள் எழுந்தது. இதனால் ரோஹித் போக்சோ சட்டத்தில் கைது […]

செய்தி

உக்ரைனின் அவ்திவ்காவை கைப்பற்றிய ராணுவ வீரர்களுக்கு புடின் வாழ்த்து

உக்ரைனின் அவ்திவ்கா நகரைக் கைப்பற்றியதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இராணுவப் பிரிவுகள் மற்றும் அவர்களின் தளபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கிரெம்ளின் இணையதளம், பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்குவிடமிருந்து நகரத்தை கைப்பற்றியது குறித்த அறிக்கையை புடினுக்கு வழங்கியதாகக் கூறியது. மேலும் “சிறந்த இராணுவ நடவடிக்கைகளுக்காக, அவ்திவ்காவுக்கான போர்களில் பங்கேற்ற உங்கள் வழிகாட்டுதலின் கீழ் உள்ள அனைத்து துருப்புக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று புடின் கூறியதாக முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை

இலங்கை : ஹட்டனில் இடம்பெற்ற கோர விபத்து : பலர் படுகாயம்!

  • February 18, 2024
  • 0 Comments

ஸ்ரீபாத யாத்திரைக்கு வந்தவர்கள் பயணித்த வேனும், பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (18.02) பிற்பகல் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் குனிகத்தேன மில்லகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கம்பஹா பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும் மாத்தறை பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் படுகாயமடைந்த இருவர் கினிகத்தேன […]

இந்தியா

இந்தியாவில் பெண் ஒருவரின் தலையுடன் வீதியில் நடமாடிய நபரால் பரபரப்பு!

  • February 18, 2024
  • 0 Comments

இந்தியாவில் பெண் ஒருவரின் தலையை துண்டித்து தூக்கி செல்லும் காணொளி வைரலாக பரவி  வருகிறது. இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் வசிக்கும் அனில் குமார் என்ற 30 வயது நபர் தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை தூக்கிக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதையடுத்து சந்தேகநபரின் கணவரே இந்த கொலையை செய்திருக்கலாம் என உள்ளூர் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பின்னர், மனைவியின் தலை […]

உலகம்

காலராவால் பாதிக்கப்பட்டுள்ள ஜாம்பியா – 3.5 டன் எலையிலான நிவாரண உதவிகளை அனுப்பி வைத்த இந்தியா

  • February 18, 2024
  • 0 Comments

காலரா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஜாம்பியா நாட்டிற்கு, இந்தியா சார்பில் 3.5 டன் எடையிலான நிவாரண உதவிகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜாம்பியாவில் கடந்த சில மாதங்களாக காலரா நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. சுத்தமான குடிநீர் கிடைக்காததும், சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்படாததாலும், காலரா நோய் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குடிப்பதற்கு மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு பொதுமக்கள் தற்போது சுத்திகரிக்கப்படாத அசுத்தமான நீரையே […]

error: Content is protected !!