வட அமெரிக்கா

அமெரிக்காவில் பாடசாலைகள் தொடங்கிய முதல் நாளிலேயே காத்திருந்த அதிர்ச்சி

  • January 6, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் குளிர்கால விடுமுறை முடிந்து பாடசாலை தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டதிலேயே ஒருவர் உயிரிழந்தார். பாடசாலை முதல்வர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். டைலன் பட்லர் என்ற அந்த 17 வயது மாணவர் பின் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். டைலன் பட்லர் மிகவும் அமைதியான மாணவர் எனவும், சக மாணவர்கள் அவரை தொடர்ந்து கிண்டலடித்து கொடுமை படுத்தி வந்ததாலேயே இப்படி ஒரு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

தொழில்நுட்ப உலகின் மற்றுமொரு சாதனை – புற்றுநோயை கண்டறியும் AI கருவி

  • January 6, 2024
  • 0 Comments

புற்றுநோய் பாதிப்பை துல்லியமாக கண்டறியும் ஏஐ கருவியை பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நவீன மருத்துவ முறையின் மிக முக்கிய கண்டுபிடிப்பை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் உடலில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் செல்லின் பாதிப்புகளை துல்லியமாக கண்டறியும் செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பத்தை கண்டறிந்திருக்கின்றனர். இந்த AI கருவிக்கு I Star என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஏஐ கருவியானது புற்றுநோய் செல்லினுடைய தாக்கம், வீரியம் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட உதவுகிறது. மேலும் பாதிப்பின் அளவு, […]

ஐரோப்பா

பிரான்ஸில் இளைஞனின் மோசமான செயல் – ஞாபகமறதி என கூறி தப்ப முயற்சி

  • January 6, 2024
  • 0 Comments

பிரான்ஸில் 25 வயது இளைஞர் 7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நல்லிரவைத் தாண்டி ஞாயிறு அதிகலைக்குள்ளான நேரத்தில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தாருடன் Trocadéro பகுதியில் 7 வயது சிறுமி இருந்துள்ளார். சில நிமிடங்கள் அவர் பெற்றோரை விட்டுப் விலகி சென்று சமயத்தில், அப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த, பரிசில் கட்டிட வேலைகள் செய்யும் 25 வயதான நபர் ஒருவர் குறித்த சிறுமியை மடக்கிப் பிடித்து […]

செய்தி

ஜெர்மனியில் உதவி பணத்தில் வாழ்பவர்களுக்கு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை

  • January 6, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் வேலை செய்ய கூடிய உடல் ஆரோக்கியம் இருந்த நிலையிலும் பல மக்கள் சமூக உதவி பணத்தில் வாழ்வதாக அரசியல் வாதிகளிடையே தற்பொழுது கருத்துக்கள் பகிரப்படுகின்றது. ஜெர்மனியின் பிரதான எதிர் கட்சியான CDUCSE கட்சி இந்த விடயத்தில் கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கமானது எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கைகையை விடுத்து இருந்தது. தற்பொழுது இதற்கு பொறுப்பான அமைச்சரான வுபேட்டன் ஹைல் அவர்கள் ஜனவரி மாதம் முதல் இவ்வகையானவர்களை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று […]

ஆசியா

சிங்கப்பூரில் வேலை செய்யும், வருகை தரும் அல்லது வசிக்கும் நபர்களுக்கு விசேட அறிவிப்பு

  • January 6, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலை செய்யும், வருகை தரும் அல்லது வசிக்கும் நபர்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டு அரசியல் நிகழ்வுகளை முன்னெடுத்து நடத்தும் தளமாக சிங்கப்பூரைப் பயன்படுத்தக் கூடாது என சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், இங்கு வெளிநாட்டு அரசியல் பிரச்சாரம் செய்வது அல்லது நிதி சேகரிப்பது ஆகியவைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது. எந்தவொரு தனிநபர் அல்லது குழுவாக இருந்தாலும் அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் […]

இலங்கை

இலங்கையர்களுக்கு பாரிய சுமையாக மாறிய மரக்கறிகளின் விலை – மக்கள் கவலை

  • January 6, 2024
  • 0 Comments

நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிலோ கிராம் கரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி 2,00 ரூபாயை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மீன் சந்தையில் மொத்த விலையும் நுகர்வோரால் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. பேலியகொட மெனிங் சந்தையில் நேற்று (04) காலை மரக்கறிகளின் மொத்த விலை உயர்வாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க.. பிரதமர் வேட்பாளர் நாமல்!! ரணிலை விரும்பாத மகிந்த

  • January 5, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவதை மகிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவும், பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவும் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறுகிறார். நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்துவதற்கு இன்னும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி செயலாளரை நீக்கிவிட்டு காமினி செனரத் ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்படுவார் […]

mahinda rajapakse இலங்கை செய்தி

ராஜபக்ஷக்கள் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள்!!! மார்வின் சில்வா

  • January 5, 2024
  • 0 Comments

ராஜபக்ஷக்கள் அனைவரும் கப்பலில் ஏற்றப்பட்டு நாட்டை விட்டு நாடு கடத்தப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மார்வின் சில்வா தெரிவித்துள்ளார். திருட்டு, மோசடி மற்றும் ஊழல் மூலம் சட்டவிரோதமாக சொத்துக்களை குவிப்பவர்கள் அனைவரும் நாட்டை விட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செய்தி

எரிவாயு இல்லை!!! பொரளை மயானத்தில் தகன நடவடிக்கைள் நிறுத்தம்

  • January 5, 2024
  • 0 Comments

பொரளை மயானத்தில் தகனம் செய்வதற்கு எரிவாயு இல்லாததால் தகனம் செய்யாமல் இன்று (05) புதைக்கும் நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இன்று காலை, இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை நிறுத்திவிட்டு, தகனம் செய்யப்பட வேண்டிய உடல்களை ஜாவத்த மயானத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள நிர்வாக பிரச்சினை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், நாளை மாலைக்குள் எரிவாயு […]

உலகம் செய்தி

ரஷ்யாவுக்கு ஆதரவாக போராடும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை!! புடின் அறிவிப்பு

  • January 5, 2024
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்காக போராடும் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ரஷ்ய குடியுரிமையை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று (04) உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனுக்கு எதிரான “சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு” ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்கள் தங்களுக்கும் தங்கள் மனைவிகள், குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு ரஷ்ய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவரது உத்தரவு கூறுகிறது. அந்த நடவடிக்கைக்காக அவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது கையெழுத்திட்ட முக்கிய ஆவணங்களை அவர்கள் வழங்க வேண்டும் என்று வெளிநாட்டு […]