வட அமெரிக்கா

அமெரிக்கா சென்ற விமானத்தில் மர்ம பொட்டலத்தால் பரபரப்பு – பின்னர் வெளியான தகவல்

  • October 15, 2023
  • 0 Comments

பனாமாவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றுகொண்டிருந்த விமானம், புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவத்தால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. விமானக் கழிவறையில் மர்மப் பொட்டலம் இருந்தமையே இதற்கு காரணாக கூறப்படுகின்றது. இதனையடுத்து பயணிகளை வெளியேற்றி பொலிஸார் வெடிகுண்டுப் பிரிவு சோதனை நடத்தியது. பொட்டலத்தில் வெடிகுண்டு அல்ல… பெரியவர்களுக்கான அணையாடை (diaper) தான் இருந்ததென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அணையாடை கவனமாகக் கறுப்புக் குப்பைப் பையில் சுற்றி வீசப்பட்டிருந்தது என்று விமான நிலையத்தின் பாதுகாப்புத் தலைவர் கூறினார். பொலிஸார் அந்த மர்மப் பொட்டலத்தின் படத்தைச் […]

வாழ்வியல்

ஒரு மாதத்திற்கு குளிர் பானங்களை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

  • October 15, 2023
  • 0 Comments

சாப்பிட்ட பிறகு குளிர் பானங்களை குடிக்கும் பழக்கம் உள்ளதா? முதலில் அதை கைவிடுங்கள். இந்நிலையில் ஒரு மாதம் முழுவதும் குளிர் பானங்களை நிறுத்தினால் என்ன நடைபெறும் என்பதை தெரிந்துகொள்வோம். இதை நாம் செய்தால் நமது உடல் எடை குறையும், வரட்சி ஏற்படாது, ஜீரணத்திலும் மாற்றம் ஏற்படும். இந்நிலையில் அடிக்கடி பசி எடுக்கும் தன்மை குறையும். குறிப்பாக காப்பைன், சர்க்கரையை எடுத்துகொள்ளும் அளவு குறைவதால் இந்த மாற்றம் ஏற்படும். மேலும் உடலின் வெப்ப நிலையிலும் மாற்றம் ஏற்படும். குடலில் […]

ஐரோப்பா

இத்தாலியின் கடற்பறவைகளின் படையெடுப்பால் மூடப்பட்ட விமான நிலையம்

  • October 15, 2023
  • 0 Comments

இத்தாலியின் வெனிஸ் நகரில் உள்ள மார்க்கோ போலோ விமான நிலையம் திடீரென மூடப்பட்டுள்ளது. கடற்பறவைகளின் படையெடுப்பால் இந்த நடவடிக்கை எடுக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வழக்கத்தைவிட அதிகமான கடற்பறவைகள் விமான ஓடுபாதையைச் சூழ்ந்திருந்தது. இதனால் இந்த விமான நிலையத்தைச் சற்று நேரம் மூட நேர்ந்தது. அதனால், விமானப் பயணங்கள் தாமதமாயின அல்லது விமானங்கள் திருப்பி விடப்பட்டன. கடற்பறவைகளைத் துரத்த வல்லூறு வளர்ப்பவர், ஒலிபெருக்கி எனப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியதாக விமான நிலைய நிர்வாகம் கூறியது. அதே சமயம் கடற்பறவைகளின் […]

உலகம்

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • October 15, 2023
  • 0 Comments

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி மீண்டவர்கள், இதயம் தொடர்பான சிக்கல்களுக்கு ஆளாகும் ஆபத்து அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் மீண்டவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு அந்த ஆபத்து நேரும் சாத்தியம் 56 சதவீதம் அதிகம் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோன தொற்றிலிருந்து மீண்ட ஓராண்டுக்குப் பிறகு இதயச் செயலிழப்பு, பக்கவாதம், ரத்தக் கட்டி உருவாதல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும். குணமான […]

ஆசியா

சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

  • October 15, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம், எதிர்வரும் மாதங்களில் சற்றே அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. பணக்கார நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருவது அதற்குக் காரணம் என மனிதவள அமைச்சு தெரிவித்தது. மின்னணு உற்பத்தி உள்ளிட்ட சந்தைகளின் வெளிப்புறத் தேவை குறையுமென்ற முன்னுரைப்பு அதற்கு மற்றொரு காரணமாகும். ஒகஸ்ட் மாதம் முழுமைக்குமான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2 சதவீதம் என்னும் குறைவான விகிதத்தில் இருந்தது. ஜூலை மாத சதவீதமும் அதே 2 சதவீதங்கள் என கூறப்படுகின்றது.

ஆஸ்திரேலியா

இஸ்ரேலில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்க முடியாத நிலை

  • October 15, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்பதற்காக திட்டமிடப்பட்ட 02 குவாண்டாஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் கடுமையான பாதுகாப்பற்ற நிலையே இதற்கான காரணம் என வெளிவிவகார திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும், இந்த விமானங்களை செயல்படுத்துவதற்கான திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எவ்வாறாயினும், போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து ஆஸ்திரேலியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதே மத்திய அரசின் நோக்கம் என வெளியுறவுத் துறை வலியுறுத்துகிறது. அதன் முதல் ஆளுநராக 238 பேர் இஸ்ரேலில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு வெளியேற்றப்பட்டனர். […]

கருத்து & பகுப்பாய்வு

மீண்டும் பேசவா?

  • October 15, 2023
  • 0 Comments

அடுத்தவருடத்துக்குள் அதிகாரத்தை பகிர தயாராக இருக்கிறேன் என மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியன் 150 அவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கிழக்கு விஜயம் செய்தால் ஒருமாதிரி பேசுகிறார். வடக்குக்குப் போனால் பால்மணம் மாறாத பாலகன்போல் இன்னொன்றை பேசியிட்டு திரும்புகிறார். தென்னிலங்கை மக்களிடம் தான் ஒரு துட்டகாமினி தரம் குறையாத சிங்கள பௌத்தன் என்ற நடிப்பில் சக்கரவர்த்தியைப்போல் நடந்து கொள்கிறார். ஏன் இப்படி மாறி மாறி பேசுகிறார் யாரை திருப்திப்படுத்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

முக்கிய துறையில் ஆதிக்கம் செலுத்த தயாராகும் Microsoft

  • October 15, 2023
  • 0 Comments

முன்னணி ஆன்லைன் கேம் நிறுவனமான ஆக்டிவேஷன் ப்ளீஸ்ஸார்ட் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆன்லைன் கேம் நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக மாறி உள்ளது. உலகின் முன்னணி நிறுவனமாக உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் கால்பதிக்கும் துறைகளில் எல்லாம் மாபெரும் வெற்றியை சுவைத்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஆக்டிவேஷன் ப்ளீஸ்ஸார்ட் என்ற ஆன்லைன் கேம் நிறுவனத்தை 68.7 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது. மிகப்பெரிய தொகையை கொடுத்து நடைபெற்ற இந்த கையகப்படுத்தும் பணி உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கிய […]

இலங்கை

ஹமாஸ் – இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் கூறும் யோசனை

  • October 15, 2023
  • 0 Comments

ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இந்து சமுத்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான Geopolitical Cartographer கொழும்பு சிட்டி சென்டரில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அதன் தற்போதைய போக்குகள் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் விளக்கமளித்தார். பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளின் கண்டனத்திற்கு […]

ஆசியா

காசா மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து – வெளியான எச்சரிக்கை

  • October 15, 2023
  • 0 Comments

காசாவில் நீரினால் பரவும் நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அசுத்தமான நீரை குடிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. காசாவுக்கு வழங்கி வந்த குடிநீர், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றையும் நிறுத்தி உள்ளது. இதனால், காசாவில் வசிக்கும் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மின்சார விநியோகம் இல்லாததால் இரவு நேரம் வெளிச்சமின்றி இருட்டாக உள்ளது. அத்தியாவசிய மின்சார தேவைக்கான எரிபொருள் இல்லாததால் மின் விநியோகம் கடுமையாக […]