காசா தேவாலயத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்; பொதுமக்கள் பலர் பலி
காசாவின் போர்பிரையஸ் தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இடம்பெயர்ந்த மக்கள் பலர் அங்கு தங்கியிருந்த நிலையில் தேவாலய வளாகத்தை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கிரேக்க ஓர்த்தடக்ஸ் போர்பிரையஸ் தேவாலயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. 12ம் நூற்றாண்டை சேர்ந்த தேவாலயத்திற்கு அருகில் காசாவின் பல முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தஞ்சமடைந்திருந்த பகுதியை இலக்குவைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதேவேளை […]













