தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை! – துணை முதல்வர் சிவக்குமார்
காவிரியில் நீர் திறப்பது சாத்தியமில்லை” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீண்டும் பிடிவாதம் காட்டியுள்ளார். காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், கர்நாடகா தரப்பு அதிகாரிகள் கூறும்போது, கர்நாடகாவில் தற்போது மழை […]













