ஸ்பெயின் வீராங்கனைக்கு முத்தம்… லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!
ஸ்பெயினின் முன்னாள் கால்பந்து சம்மேளன தலைவா் லூயிஸ் ரூபியால்ஸுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து ஃபிஃபா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஸ்பெயின் வீராங்கனைக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பரிசு வழங்கும் நிகழ்வின்போது மேடைக்கு வந்த ஸ்பெயின் வீராங்கனை ஜெனி ஹொ்மோசோவுக்கு, லூயிஸ் முத்தம் கொடுத்தார். இந்த விவகாரம் சா்வதேச அளவில் இது சா்ச்சையானது. […]











