ஐரோப்பா

இஸ்ரேல் -ஹமாஸ் போர் : பாரிஸில் ஒன்றுக்கூடிய 20இற்கும் மேற்பட்ட நாடுகள்!

  • December 12, 2023
  • 0 Comments

இஸ்ரேல் உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் பாரிஸில் ஒன்றுக்கூடி ஹமாஸின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  ஆனால் இந்த கூட்டத்தில் அரபு நாடுகள் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அக்டோபர் 07 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு, பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவிற்கு  எதிராக ஒரு குறிப்பிட்ட பொருளாதாரத் தடைகளை கொண்டுவர ஜேர்மனி மற்றும் இத்தாலியுடன் இணைந்து பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் […]

ஐரோப்பா

புடினின் முக்கிய அரசியல் எதிரியான அலெக்ஸி நவல்னியை காணவில்லை : வெளியான அதிர்ச்சி தகவல்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியிடம் இருந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்றும் அவரது வழக்கறிஞர்கள் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். திங்களன்று, நவல்னியின் நீதிமன்ற விசாரணைக்கு அவர் மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகவில்லை, சிறை அதிகாரிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினர் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மொஸ்கோவின் கிழக்கே உள்ள விளாடிமிர் பகுதியில் உள்ள IK-6 தண்டனைக் காலனியில் இருந்து […]

இலங்கை

இலங்கையில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • December 12, 2023
  • 0 Comments

சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை இன்று (12.12) முதல் உயர்த்த கோழி மொத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியை  30-50 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில விற்பனையாளர்கள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய விலையின் கீழ் ஒரு கிலோ கோழி இறைச்சியானது 1250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முட்டை ஒன்றின் விலையும் 60 ரூபாவாக […]

உலகம்

வெனிசுலாவிலிருந்து மின்சாரம் இறக்குமதியை மீண்டும் தொடங்கும் பிரேசில்

பிரேசில் தனது அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மின்சார இறக்குமதியைத் தொடங்கும் என்று பிரேசிலின் எரிசக்தி மற்றும் சுரங்க அமைச்சகம் மற்றும் எரிசக்தி நிறுவனமான அம்பர் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பிரேசிலிய மாநிலமான ரொரைமாவில் உள்ள நுகர்வோருக்கு எரிசக்தி செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் கீழ் நாடுகளுக்கிடையேயான உறவுகள் மோசமடைந்ததை அடுத்து 2019 ஆம் ஆண்டில் பிரேசில் அதன் அண்டை நாடுகளிடம் […]

இலங்கை

திருகோணமலையில் மக்கள் நலன் கருதி சுற்றுலா நீதிமன்றம் திறந்து வைப்பு

  • December 12, 2023
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ மற்றும் கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் நலன் கருதி இன்று (12) மொரவெவயில் சுற்றுலா நீதிமன்றம் உத்தியோபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லா தலைமையில் ஆரம்பிக்கப் பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக இதுவரை காலமும் ஜம்பதுக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருகோணமலை நகர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் காலை செல்லக்கூடிய பஸ் விடுபட்டால் அன்றைய தினம் வழக்குகளுக்கு செல்ல முடியாத நிலை […]

இலங்கை

இலங்கையில் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை!

  • December 12, 2023
  • 0 Comments

இலங்கையில் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தகவல் அதிகாரி புவியியலாளர்  நில்மினி தல்பே தெரிவித்தார். அண்மைக்காலமாக இலங்கையின் கடற்பரப்புகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதை அவதானிக்கக்கூடிய நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  ரிக்டர் அளவுகோலில் 05க்கும் குறைவான சிறிய நிலநடுக்கங்கள் நாட்டில் ஏற்படுகின்றன. நாட்டில் 04 நில அதிர்வு அளவீடுகள் நிறுவப்பட்டுள்ளன. அம்பலாங்கொட, ஹக்மன, பல்லேகல மற்றும் மஹகந்தராவ பிரதேசங்களில் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கம் […]

ஆசியா

காசாவில் அவசர பணிகளை மேற்கொள்ளும் மருத்துவ ஊழியர்களை தடுத்து நிறுத்தும் இஸ்ரேல் : உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு

காசாவில் அவசர பணிகளை மேற்கொள்ளும் மருத்துவ ஊழியர்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. உலக சுகாதார அமைப்பு ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் இஸ்ரேல் ஒரு முக்கிய மருத்துவ பணியை தாமதப்படுத்துவதாகவும், பாலஸ்தீனிய மருத்துவ ஊழியர்களை துப்பாக்கி முனையில் மண்டியிடச் செய்வதாகவும், அவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் வேலைகளைச் செய்வதைத் தடுக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை

க.பொ.த உயர்தரத்திற்கான விண்ணப்பம் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

கல்விப் பொதுப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படுகின்றது என்பது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கருத்துத் தெரிவித்துள்ளார். இன்று (12) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகள் விண்ணப்பங்களை கோர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மாணவர்களுக்கு படிக்கும் பாடசாலையில் பொருத்தமான பாடம் இல்லை என்றால், அந்த மாணவர்களுக்கு மற்ற பாடசாலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐரோப்பா

உக்ரைனுக்கு புதிய உதவி தொகுப்பை அறிவித்த IMF!

  • December 12, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு 900 மில்லியன் டொலர் வழங்க  IMF ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து கியேவிற்கு எதிர்கால நிதி மற்றும் இராணுவ ஆதரவு பற்றிய கவலைகளுக்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. IMF நிர்வாக இயக்குனர் Kristalina Georgieva  வாஷிங்டனில் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy உடன் இணைந்து இந்த உதவி தொகுப்பை அறிவித்துள்ளார். உக்ரைன் நிதி மற்றும் இராணுவ உதவியை நம்பியுள்ளது, ஆனால் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூடுதல் நிதியளிப்பில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. […]

உலகம்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல்?

  • December 12, 2023
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்,  நியூ ஹாம்ப்ஷயர் பகுதியில் பிரச்சார நிகழ்வுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொலை அச்சுறுத்தல் எந்த வேட்பாளருக்கு விடுக்கப்பட்டது என்ற தகவலை அமெரிக்க வழக்குறைஞர் அலுவலகம் வெளியிடவில்லை. இருப்பினும், குறித்த அச்சுறுத்தல் விவேக் ராமசாமிக்கு விடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை கையாள்வதில் சட்ட […]

error: Content is protected !!