செய்தி வட அமெரிக்கா

உணவினால் ஏற்பட்ட தகராறால் மனைவியை கொன்ற 85 வயது அமெரிக்கர்

  • December 16, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் 85 வயது முதியவர் ஒருவர் தனக்காக தயாரித்த அப்பத்தை(பான்கேக்) சாப்பிட விரும்பாததால், 81 வயதான தனது மனைவியை கத்தியால் குத்தி கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஸ்டீவன் ஸ்வார்ட்ஸ் தனது மனைவி ஷரோன் ஸ்வார்ட்ஸை டிசம்பர் 10 அன்று சமையலறைக் கத்தியால் கொன்றார். 81 வயதான அவர் வாஷிங்டன் DC வீட்டிற்குள் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் காணப்பட்டார், அதே நேரத்தில் திரு ஸ்வார்ட்ஸ் வீட்டிற்குள் “சுய […]

ஐரோப்பா

நாட்டில் உள்ள 15 இடங்களை அமெரிக்க ராணுவத்துக்கு வழங்கும்.பின்லாந்து

பின்லாந்து அமெரிக்காவுடன் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவது தொடர்பான தனது விருப்பத்தை அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் பட்சத்தில் அமெரிக்கா ராணுவத்தின் ராணுவ தளங்கள், ஆயுத கிடங்குகள், படை வீரர்களுக்கான தளங்கள் போன்றவற்றை அமைக்க பின்லாந்து தங்கள் நாட்டில் உள்ள 15 இடங்களை அமெரிக்க ராணுவத்துக்கு வழங்கும். இதில் விமான தளங்கள், கடற்படை மற்றும் பயிற்சி மையங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

7.8 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்ட மெஸ்ஸியின் 6 ஜெர்சிகள்

  • December 16, 2023
  • 0 Comments

கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 3-வது உலகக்கோப்பையை வென்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார். இந்த உலகக்கோப்பை தொடரின்போது மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜென்டினா அணியின் 6 ஜெர்சிகள் நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அந்த 6 ஜெர்சிகளும் 7.8 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.65 கோடிக்கு விற்பனையாகி […]

இந்தியா

இந்தியா அருணாசல பிரதேசத்தில் பயங்கரம்: முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை

அருணாசல பிரதேச மாநிலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. யெம்செம் மாட்டேவை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். மியான்மர் எல்லை பகுதியில் அமைந்துள்ள இடாநகர் மாவட்டத்தின் ராஹோ கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. காட்டுப்பகுதியில் வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்

ஐரோப்பா

உக்ரைன் மீது சைபர் தாக்குதல்களை தீவிரப்படுத்ததும் ரஷ்யா

போரின் மிக மோசமான இணையத் தாக்குதல்களில் ஒன்றாக உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது இந்த வாரம், உக்ரைன் 48 மணி நேர இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்டது, ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து உக்ரேனிய நெட்வொர்க்குகள் மீதான சைபர் தாக்குதல்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய சீர்குலைவுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. Kyivstar உக்ரைனின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மொபைல் மற்றும் வீட்டு இணைய சேவைகளை வழங்குகிறது. சைபர் தாக்குதலால் பயனர்களுக்கு மொபைல் சிக்னல் அல்லது […]

இலங்கை

இலங்கை : 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, களுத்துறை, காலி, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பதுளை, கண்டி, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு […]

ஆசியா

இனி விசா தேவையில்லை… 33 நாடுகளுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான் அரசு

  • December 16, 2023
  • 0 Comments

மேற்காசிய நாடான ஈரானில் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி, ‘ஈரானின் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் […]

பொழுதுபோக்கு

பயங்கர த்ரில்லிங்கான டிமாண்டி ‘காலணி 2″ பட டிரைலர் வெளியானது…

  • December 16, 2023
  • 0 Comments

அருள்நிதி நடிப்பில் வெளிவந்த படங்களில் செம ஹிட்டடித்த படம் டிமாண்டி காலணி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் படு சூப்பராக தயாராகியுள்ளது. தற்போது படத்தி டிரைலர் வந்துள்ளது, அதை பார்க்கும் போது முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் படு த்ரில்லிங்காக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.

இந்தியா

இந்தியா – தான் நிரபராதி என நிரூபிக்க சட்டம் படித்து வாதாடி வென்ற இளைஞர்..!

  • December 16, 2023
  • 0 Comments

12 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், சட்டம் படித்து வாதாடி தன்னை நிரபராதி என்று நிரூபித்துள்ளார். இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் சௌத்ரி என்பவர் 12 ஆண்டுகளுக்கு கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.கடந்த 2011ம் ஆண்டு அமித் சௌத்ரி (அப்போதைய வயது 18) என்பவர் பாக்பத் மாவட்டத்திலுள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, ஏற்பட்ட பிரச்சனையில் இரண்டு காவலர்கள் தாக்கப்பட்டனர். அதில் ஒரு காவலர் உயிரிழந்தார், […]

இலங்கை

ஜனாதிபதி மீது தனிப்பட்ட குரோதங்களை கொண்டுள்ள உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள்: இரா.சாணக்கியன்

ஜனாதிபதி மீது உயர்மட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதன் காரணமாக அவர்களிடையே உள்ள முரண்பாடுகளை வைத்து மக்களை வதைக்கும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சென்று பார்வையிட்டார். கடந்த 27ஆம் திகதி மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நினைவேந்தல் தினத்தற்கு மாவீரர்களை நினைவேந்தல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் விடுதலைப்புலுpகளுக்கு ஆதரவு […]