நான் இலங்கைக்கு வர வேண்டிக்கொள்ளுங்கள்: போதகர் ஜெரோம் விசுவாசிகளிடம் கோரிக்கை
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ மீண்டும் இலங்கைக்கு வரத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பணமோசடி உட்பட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த நாட்டில் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் வேளையில் அவர் சிங்கப்பூரில் இருந்து பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இங்கிலாந்தில் இருந்து நேற்றைய தினம் சேவையொன்றை நடத்திய அவர், தன்னை இலங்கைக்கு அழைத்து வருமாறு கடவுளிடம் வேண்டிக்கொள்ளுமாறு தனது விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். “இறைவன் என்னை விரைவில் உடல் ரீதியாக உங்களிடம் திருப்பித் தரும்படி […]













