மறைந்த இளம் ஊடகவியலாளர் பிரகாஸ் நினைவாக இரத்ததான முகாம்!
மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை(02) யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பெருமளவானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியுள்ளனர். பிரகாஸினுடைய நண்பர்களின் ஏற்பாட்டில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தரம் […]













