பிரதமரை சந்தித்த நடிகர் பிரபுதேவா!
திரைப்பட படப்பிடிப்புக்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும் நடனக் கலைஞருமான பிரபுதேவா, பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
திரைப்பட படப்பிடிப்புக்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும் நடனக் கலைஞருமான பிரபுதேவா, பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மஹஜன ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பிரதமர் தலைமைத்துவம் வகிக்கும் மஹஜன ஐக்கிய முன்னணியும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரே விஷயத்தை பாராட்டி தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. சமீபத்தில் சென்னை விமான நிலையம் சென்ற அனிருத் அங்கு செயல்பட்டு வரும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் கூடுதல் கவுண்டர்கள் மற்றும் புதிய ஊழியர்களை பணி அமர்த்தியதற்கு நன்றி என்றும் முன்பை விட மிகவும் எளிதாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். […]
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’தளபதி 68’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தின் பூஜை கூட இன்னும் போடவில்லை என்பதும் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில வாரங்களாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் அதற்குள் தொடங்கி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி கோலிவுட் திரையுலகில் பெரும் […]
காதலுக்கு வயது வரம்பு இல்லை. ஒருவர் உயர்நிலைப் பள்ளியில் படித்த ஒரு பெண்ணைக் காதலித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக இருவருக்கும் இடையே அந்த காதல் சேரவில்லை ஆனால் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அதே பெண்ணுடன் மீண்டும் இணைந்த சம்பவம் . பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த மருத்துவர் தான் கழித்த பெண்ணை சந்தித்த அடுத்த நிமிடமே தனது காதலை வேகமாக அறிவித்து அதே பெண்ணின் கையைப் பிடித்துள்ளார். ஒரு மனிதன் தன் முதல் காதலை மறப்பதில்லை. அவர் […]
கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (16.09) இடம்பெற்ற மாநாட்டின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மாவட்டச் செயலாளர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டில், கிராம நிர்வாக அலுவலர்களின் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் கிராம சேவை உத்தியோகத்தர்களின் தற்போதைய கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் […]
வட ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், இத்தாலியின் லம்பேடுசா தீவில் மீட்புப் பணியின் போது ஐந்து மாத ஆண் குழந்தை ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. லம்பேடுசாவில் புலம்பெயர்ந்தோர் தரையிறங்கியதால் இந்த சோகம் நிகழ்ந்தது, புதன்கிழமை சுமார் 1,850 பேர் தரையிறங்கினர், இது லம்பேடுசாவில் குடியேறியவர்களின் மொத்த எண்ணிக்கையை 6,700 க்கும் அதிகமாகம் என தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை பயணித்த படகு இத்தாலிய கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்படுவதற்கு சற்று முன்னர் கவிழ்ந்தது. குழந்தையின் […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உட்பட நூற்றுக்கணக்கான உக்ரைனியர்களுக்கு சொந்தமாக கிரீமியாவில் உள்ள சொத்துகளை விற்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு ரஷ்ய படைகள் கிரீமிய தீபகற்பத்தை கைப்பற்றின. உலக நாடுகள் அதனை அங்கீக்கரிக்காத போதும் ரஷ்ய அதிகாரிகள் அங்கு தேர்தல் நடத்தி அரசை நிர்வாகித்து வந்தனர். அங்கு உக்ரைன் நாட்டு அரசியல் தலைவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சொந்தமான 500 சொத்துகளை தேசியமையமாக்கிய ரஷ்ய அதிகாரிகள், 815 மில்லியன் ரூபிள் மதிப்பிலான அந்த சொத்துக்களை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இலங்கைக்கு சட்டவிரோதமாக சிகெரட் குச்சிகளை கொண்டுவர முற்பட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கட்டுநாயக்கா பண்டார்நாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் இருந்து வருகை தந்த குறித்த பெண் 17 ஆயிரம் சிகரெட் குச்சிகளை கடத்தியதாக கூறப்படுகிறது. இதன் பெறுமதி 1.7 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் செலவுகள் தொடர்பான சட்டமூலத்தின்படி தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை 21 நாட்களில் இருந்து 42 நாட்களாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குடியியல் வழக்கு நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைக்கான திருத்தம் மற்றும் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் நீதி மற்றும் சட்டம் மீதான துறைசார் மேற்பார்வை குழுவில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தல் சட்டமூலங்களால் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை போதுமானதாக இல்லாததால், தற்போதைய நிலைமைக்கு உரியவாறு அபராதத் தொகையை […]