இலங்கை

கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்து முக்கிய கலந்துரையாடல்!

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16.09) இடம்பெற்ற மாநாட்டின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மாவட்டச் செயலாளர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டில், கிராம நிர்வாக அலுவலர்களின் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் கிராம சேவை உத்தியோகத்தர்களின் தற்போதைய கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்