இலங்கையில் பயணப்பைக்குள் மீட்கப்பட்ட சடலம் – பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்கள்
சீதுவ, தண்டுகம் ஓயா பகுதியில் கடந்த வியாழக்கிழமை பயணப்பை ஒன்றுக்குள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்ட நிலையில் சடலம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த நபர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பாக பிறிதொரு பிரதேசத்தில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு, பின்னர் பயணப்பைக்குள் இடப்பட்டு குறித்த பகுதியில் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்லானவத்தை, கிந்திகொட பிரதேசத்தின் […]













