தமிழி, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதையடுத்து ‘குஷி’ […]
இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் ஃபெடரிகோவை அழைத்து வந்திருந்தார். பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே பாராளுமன்றம் அமைதியானது. எனினும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை. குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தி பாலூட்ட தொடங்கினார். இவரின் செய்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வந்தனர். அவையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய எம்பி-யை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி […]
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஜூன் மாதம் 21-ஆம் திகதி நடத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. இன்று (08) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், போலியான பல்கலைக்கழக நுழைவு கடிதங்கள் மூலம் கனடாவிற்குள் நுழைந்திருப்பதாகவும், அது சட்டவிரோதம் என்பதால், அவர்களை வெளியேற்றும் முயற்சியில் கனடாவின் எல்லை சேவை நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனடா எல்லை சேவை நிறுவனம் சமீபத்தில் 700 இந்திய மாணவர்களுக்கு நாடு கடத்தல் தொடர்பான கடிதங்களை வழங்கியுள்ளது. மாணவர்களின் சேர்க்கை தொடர்பான நுழைவு கடிதங்கள் போலியானவை என கண்டறிந்ததை அடுத்து […]
குஞ்சிப் பொரிக்கும் முட்டைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதிய செய்ய விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம் (NLDB) மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நாட்டில் தற்போது நிலவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கோழிகளுக்கு பதிலாக 176,000 குஞ்சு பொரிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் ஒரு மாத […]
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேற்கண்டவாறு தெரிவித்தார். பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், விஞ்ஞான பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு ஜூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் விலைவாசி தொடர்பில் மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பணவீக்கமும் உக்ரைன் போரும் சுவிஸ் மக்கள் பொருட்கள் வாங்கும் அளவை பாதிக்கத் துவங்கியுள்ளன. விலைவாசியோ உயர்ந்துகொண்டே செல்கிறது.சமீபத்தில் ஆய்வமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்று, இரண்டு குழந்தைகளைக் கொண்ட சராசரி சுவிஸ் குடும்பம் ஒன்று, இனி ஆண்டொன்றிற்கு கூடுதலாக 2,600 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிடவேண்டிவரலாம் என்கிறது.2,600 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிடவேண்டிவரலாம் என்கிறது. ஜூன் 1 முதல் சுவிட்சர்லாந்தில் மாதம் ஒன்றிற்கு 2,000 ஃப்ராங்குகள் வாடகை செலுத்தும் மக்கள், இனி […]
கனடாவின் பிராம்ப்டன் நகரில் நடந்த கண்காட்சி அணிவகுப்பு ஒன்றில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொலை செய்யப்படுவது போன்ற சிலைகள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இது சம்பந்தமான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில், சர்ச்சை எழுந்தது. படுகொலையை ஆதரிப்பது போன்று இந்தக் கண்காட்சி அணிவகுப்பு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதில் பெரிய விவகாரம் தொடர்பில் இருக்கும் என நான் நினைக்கிறேன். […]