அறிவியல் & தொழில்நுட்பம் ஐரோப்பா

வீடியோக்கள் பார்த்து உணவு தயாரிக்கும் ரோபோவை உருவாக்கியுள்ள ஆராச்சியாளர்கள்

  • June 9, 2023
  • 0 Comments

சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் வகையில் ரோபோ ஒன்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர் . இதற்காக புரோகிராம் செய்யப்பட்ட அந்த ரோபோ மனிதர்கள் உருவாக்கும் சமையல் வீடியோவை பார்த்து அது என்ன ரெசிப்பி என்பதை கண்டுபிடித்து அந்த உணவை தானே தயார் செய்து அசத்தியுள்ளது. இதன் பின் 8 சாலட் குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றை அந்த ரோபோவிடம் கொடுத்ததாஆகவும் அதனை படித்து அந்த 8 உணவுகளையும் சமைத்த ரோபோட் ஒன்பதாஒதாக தானே […]

இலங்கை

களுத்துறை சிறுமி மரணம்: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

களுத்துறையில் ஐந்து மாடி விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 3 பேரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்று(9) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபரின் சாரதி என கருதப்படும் நபரை, இன்று பிணையில் செல்ல […]

மத்திய கிழக்கு

பஹ்ரைனில் சர்ச்சைக்குரிய கற்பழிப்பு சட்டமூலம் இரத்து!

  • June 9, 2023
  • 0 Comments

பஹ்ரைன் நாட்டில் சர்ச்சைக் குரிய கற்பழிப்பு சட்டமூலம் இரத்து செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில்  கற்பழிப்பில் ஈடுபட்ட நபர்  கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தால். அவர் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா பஹ்ரைன் ஷுரா கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒருமித்த கருத்தோடு ஆதரவாக வாக்களிக்க,  மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் ரத்து செய்யப்பட்டது. இனிமேல் […]

வட அமெரிக்கா

சண்டையை விலக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி!

  • June 9, 2023
  • 0 Comments

உறவினர்கள் இருவருக்குள் நடந்த சண்டையை விலக்கச் சென்ற ஒருவரை சண்டையிட்ட ஒருவர் கடித்துவிட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்ற நிலையிலும், அவரது நிலைமை மோசமானது. ப்ளோரிடாவைச் சேர்ந்த டோனி ஆடம்ஸ் , வீட்டில் நடந்த பார்ட்டி ஒன்றின்போது உறவினர்கள் இரண்டு பேர் கட்டிப்புரண்டு சண்டையிட, அவர்களை விலக்கிவிட முயன்றுள்ளார். அப்போது ஒருவர் ஆடம்ஸை தொடையில் கடித்துள்ளார்.உடனடியாக ஆடம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சையளித்துள்ளார்கள். ஆனால், அவரது நிலைமை மோசமாகியுள்ளது. மூன்றாவது நாள் கால் வீங்கி […]

இலங்கை

சகோதரருக்கு பதிலாக சாதாரண தரப் பரீட்சை எழுதிய இளைஞன் கைது!

தனது சகோதரருக்கு பதிலாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய இளைஞன், தெனியாய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெனியாய – பல்லேகம வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சிங்கள பரீட்சை வினாத்தாளை கையளிக்க தயாரான மேற்பார்வையாளர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை

ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள அதிரடி நடிவடிக்கை

  • June 9, 2023
  • 0 Comments

கொவிட்-19 மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சர்கள் குழுவிற்கும், வைத்தியர் சீதா அரம்பேபொல நிபுணர் குழுவிற்கும் தலைமை தாங்குகின்றனர் .

ஆசியா

உணவகத்தில் சிறுவன் செய்த செயல்… 40 கோடி இழப்பீடு கேட்ட நிறுவனம்

  • June 9, 2023
  • 0 Comments

ஜப்பானில் சுஷி உணவக நிறுவனம் ஒன்று சிறுவன் ஒருவர் சோயா சாஸ் போத்தலை எச்சில் வைத்ததாக கூறி 40 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. ஜப்பானில் Sushiro என்ற சுஷி உணவக நிறுவனம், நாட்டின் பல்வேறு நகரங்களில் உணவகங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அதன் உரிமையாளர் Akindo Sushiro ஒசாகா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்துள்ளார்.அதில் தொடர்புடைய சம்பவம் கடந்த ஜனவரியில் கிஃபு மாகாணத்தில் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். சிறுவன் ஒருவன் தமது […]

இலங்கை

சுற்றுலாப் பயணிகளின் வருகை இரு மடங்காக அதிகரிப்பு

கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை நூற்று எழுபத்தைந்து வீதத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30,207 ஆகவும், இந்த ஆண்டு மே மாதத்தில் வந்தவர்களின் எண்ணிக்கை 83,309 ஆகவும் அதிகரித்துள்ளது. இது 175.8 சதவீத வளர்ச்சியாகும்.  

ஆஸ்திரேலியா

தனது விமான ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்த காண்டாஸ் நிறுவனம்!

  • June 9, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான காண்டாஸ் தனது விமான ஊழியர்களுக்கான  சீருடை விதிகளை நீக்கியுள்ளது. இதன்படி  விமானச் சிப்பந்திகளான பெண்கள் குதி உயர்ந்த பாதணிகளை அணியாமல் விடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆண் சிப்பந்திகளும் மேக் அப் அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவீன எதிர்பார்ப்புகளை சிறப்பாக பிரதிபலிப்பதற்கும்இ பல்லினக் கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட ஊழியர்களுக்கு சீருடைகள் சௌகரியமாக இருப்பதற்காகவும் இந்த விதிகளில் மாற்றம் செய்துள்ளதாக காண்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெண் ஊழியர்கள் கட்டாயமாக மேக் அணிய […]