அறிவியல் & தொழில்நுட்பம்

சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் ரோபோ!

பொதுவாக நாம் சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் பழக்கம் கொண்ட அதிகமான மக்களை பார்த்துள்ளோம்.ஆனால் இது சற்று வித்தியாசமாக உள்ளது. சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் வகையில்  ரோபோ ஒன்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர் . புரோகிராம் செய்யப்பட்ட அந்த ரோபோ மனிதர்கள் உருவாக்கும் சமையல் வீடியோவை பார்த்து அது என்ன ரெசிப்பி என்பதை கண்டுபிடித்து அந்த உணவை தானே தயார் செய்து அசத்தியுள்ளது. 8 சாலட் குறிப்புகள் அடங்கிய புத்தகம் […]

பொழுதுபோக்கு

விக்கி – நயன் குழந்தைகள் இவ்வளவு பெருசா வளர்ந்துவிட்டார்களா?

  • June 9, 2023
  • 0 Comments

நயன்தாரா, விக்னேஷ் சிவனை ஊரறிய திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றெடுக்கவும் தயாராகி விட்டனர். திருமணமான நான்கே மாதத்தில், இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு… வாடகை தாய் மூலம், குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். தங்களுடைய குழந்தைகளுக்கு உயிர் – உலகம் என வித்தியாசமான பெயர் சூட்டி உள்ள இருவரும், இன்று தங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். குழந்தைகள் இருப்பதால், […]

உலகம்

கனடாவில் பரவும் காட்டுத்தீ! தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்களின் நடவடிக்கை

கனடாவில் காட்டுத் தீயை அணைக்க வரவழைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்கள் ஆடியும் பாடியும் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர். கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ, உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. காட்டுத் தீயை விரைவாகக் கட்டுப்படுத்த தென்னாப்பிரிக்காவில் இருந்து 200 வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எட்மண்டன் நகருக்கு வந்த வீரர்கள், தங்கள் உடைமைகளுடன் விமான நிலையத்தில் நடனமாடினர். தங்களை உற்சாகப்படுத்தும் விதமாக, தீயணைப்புத் துறையில் நுழைவதற்கு முன்பு தங்கள் மகிழ்ச்சியைக் காட்ட தென்னாப்பிரிக்கக் கொடிகளை ஏந்தியபடி பாரம்பரிய நடனம் […]

இலங்கை

முல்லேரியா குழந்தை மரணம்! ஒருவா் கைது

வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையின் மரணம் தொடா்பில் சந்கேத்தின் அடிப்படையில் ஒருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். . சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 51 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். . முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் வெட்டு காயங்களுடன் 5 வயது குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது. 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முல்லேரிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது நேற்று (08) பிற்பகல் குழந்தையின் சடலம் […]

இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 44 ஆயிரம் பேர் கடமையில் ஈடுபட்ட விவகாரம் அடிப்படையற்றது – டிரான் அலஸ்

  • June 9, 2023
  • 0 Comments

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக 44 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று  (09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரட்சி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ காலி முகத்திடல் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 38 பொலிஸ் […]

ஐரோப்பா

ரஷ்யா – உக்ரைன் போரில் ட்ரோன் தாக்குதல் அதிகரிப்பு!

  • June 9, 2023
  • 0 Comments

ரஷியா- உக்ரைன் போரில் தற்போது ட்ரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியாவின் மாஸ்கோ நகர் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் சிலர் காயம் அடைந்தனர். பதிலுக்கு ரஷியாவும் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே மிகப்பெரிய அணையை குண்டு வைத்து தகர்த்ததாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள தென்மேற்கு ரஷியாவின் மத்திய வொரோனெஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு […]

உலகம்

“உக்ரைன் அதிபர் கொல்லப்படுவார்! ரஷ்யா முன்னாள் அதிபர் பரபரப்பு

உக்ரைன் போர் தொடரும் நிலையில், மேற்குலக நாடுகளாலேயே உக்ரைன் அதிபர் கொல்லப்படுவார் என்று ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்தாண்டு பெப்ரவரி . மாதம் போர் ஆரம்பிக்கப்பட்டு இப்போது ஓராண்டைக் கடந்தும் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. போர் நடக்கும் போது கடந்தாண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு முக்கிய ஆயுதங்களை வழங்கினர். ரஷ்யாவின் தாக்குதலைச் சமாளிக்க இதுவே உக்ரைனுக்குப் பெரியளவில் உதவியது. இதனிடையே இந்த […]

ஆரோக்கியம் வாழ்வியல்

காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • June 9, 2023
  • 0 Comments

பழங்கள் மிகவும் சுவையானவை மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியவை. பலவிதமான பழங்களை இயற்கை நமக்காக அளித்துள்ளது. அதில் ஒன்று தான் ஆப்பிள்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று சொல்வார்கள். ஏனெனில் அந்த அளவில் ஆப்பிள் நமது உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கின்றன. மேலும் நிறைய பேருக்கு ஆப்பிள் மிகவும் விருப்பமான பழமாக இருக்கும் ஆனால் இந்த ஆப்பிளை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இரட்டிப்பு பலன்கள் […]

இலங்கை

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானம் !

கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (09) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இதனை தெரிவித்தார். அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வரும் நிலையில் இதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.