வட அமெரிக்கா

குவியும் அகதிகள் – மெக்சிகோ எல்லைக்கு 1,500 படை வீரர்களை அனுப்பும் அமெரிக்கா

  • May 3, 2023
  • 0 Comments

அமெரிக்கா மெக்சிகோ இடையேயான எல்லை பகுதிகளில் 1,500 படை வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தென்மேற்கு எல்லைப் பகுதிகளில் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், மெக்சிகோவைத் தவிர பிற நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் பேட் ரைடர் பேசும் பொழுது, இந்த மாத இறுதியில் […]

இலங்கை செய்தி

டீசல் விலை குறைந்தால் மட்டுமே பஸ் கட்டணம் குறையும்

  • May 3, 2023
  • 0 Comments

  எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் பஸ்கட்டணங்களை குறைப்பதானால்; டீசல் லீற்றருக்கு மேலும் 20 ரூபாவால் குறைக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விலை குறைப்போடு ஒப்பிடும்போது பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என்றும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை குறைக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமா என்பது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள தனியார் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் முதலைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட நபரின் உடல் – அதிர்ச்சியில் பொலிஸார்

  • May 3, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் மீன்பிடிக்கச் சென்ற நபரின் உடல் பாகங்கள் முதலைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 65 வயதுடைய Kevin Darmody வடக்குக் குவீன்ஸ்லந்தில் உள்ள Lakefield தேசியப் பூங்காவில் சிலருடன் மீன்பிடிக்கச் சென்றிருந்தார். அங்குள்ள நீரில் இருந்த முதலையை அவர்கள் விரட்டி மீன்பிடிக்க ஆரம்பித்ததாக அதிகாரிகள் கூறினர். டார்மோடி உரக்கக் கத்தியவாறு தண்ணீருக்குள் விழுந்த சத்தம் கேட்டதாக அங்கு இருந்தவர்கள் கூறினர். அதன் பின் 2 முதலைகளை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். முதலைகளின் சடலங்களைப் பரிசோதனை செய்தபோது டார்மோடியின் […]

செய்தி தமிழ்நாடு

மாஸ்டர் கிளப் சார்பில் அயன் லேடி கோப்பை போட்டி நடைபெற்றது

  • May 3, 2023
  • 0 Comments

சென்னை ரெட்டிஹில்ஸ் ஸ்டாக் கிரிக்கெட் மைதானத்தில் மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டி நடைபெற்றது. மாஸ்டர் கிரிக்கெட் கிளப் நிறுவனர் ஷம்சுதீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள தென்காசி,நெல்லை,கோவை,திருப்பூர், விழுப்புரம்,வேலூர்,ஈரோடு,சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 மகளிர் கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்டு போட்டியிட்டனர். சென்ற மாதம் 17ஆம் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டி இன்று 02/05/2023 இறுதி போட்டி நடைபெற்றது. இதில் STGMIS கிரிக்கெட் அகாடமி […]

விளையாட்டு

சவுதி அரேபியா சென்ற லயனல் மெஸ்ஸி – அதிரடி நடவடிக்கை எடுத்த தயாராகும் மெஸ்ஸி

  • May 3, 2023
  • 0 Comments

பிரபல காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி சவுதி அரேபியா சென்றதால் அணி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Paris Saint-Germain (PSG) அணியின் அனுமதியின்றி சென்றமையினால் அவர் மீது இரண்டு வாரத் தடை விதிக்கப்படலாம் என பிரான்ஸில் சில ஊடகங்கள் கூறின. ஒழுங்கு நடவடிக்கை நடப்பில் இருக்கும்போது அவர் பயிற்சி செய்யவோ விளையாடவோ முடியாது. அவருக்குச் சம்பளமும் அளிக்கப்படமாட்டாது என்று ஒருவர் குறிப்பிட்டார். 36 வயது மெஸ்ஸி சென்ற ஞாயிற்றுக்கிழமை (30 ஏப்ரல்) PSG […]

ஆன்மிகம்

தேவாரம்

  • May 3, 2023
  • 0 Comments

திருஞானசம்பந்தர் 82) திருஅவள் இவள்நல்லூர் – திருவிராகம் – சாதாரி 3679) கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி, தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி, கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக, அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.1உரை இறைவர் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலை அணிந்தவர். முப்புரிநூல் அணிந்த திருமார்பினர். திருவெண்ணீறு பூசியவர். இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவர். ஆகாயத்தில் திரிந்த பொன், வெள்ளி, […]

வாழ்வியல்

ஆவி பிடிப்பதால் முகத்தில் ஏற்படும் நன்மைகள்!

  • May 3, 2023
  • 0 Comments

முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். எனவே, ஆவி பிடிப்பதன் மூலம் ஏற்படும் பயன்கள் பற்றி பார்ப்போம்! 1. கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் […]

கருத்து & பகுப்பாய்வு

உங்கள் வேலையில் உயரத்தைத் தொடலாம் – கடைப்பிடிக்க சில வழிமுறைகள்

  • May 3, 2023
  • 0 Comments

வேலையில் நிராகரிக்கப்படுவது கஷ்டமானதுதான், ஆனால் கற்றுக்கொள்ள அதில் நிறைய விஷயம் இருக்கிறது. இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட ஒரு சி.இ.ஓ அதற்கு பதிலளிக்கிறார். புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிகையான வோக்கின் எடிட்டர் அன்னா வின்டூர், ஹார்பர்ஸ் பஸார் பத்திரிகை வேலையிலிருந்து தன்னை நீக்கியதுதான் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் என்று கூறியிருக்கிறார். ஐ.டி.8 மீடியா சொல்யூஷன்ஸ் சி.இ.ஓ-வான தான்யா ஸ்வெட்டாவும் அன்னாவின் கொள்கையோடு உடன்படுகிறார். தற்போது பி.ஆர். நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் தான்யா, இதற்கு முன்னர் 2 […]

ஐரோப்பா

சைக்கிளில் வேலைக்குச் சென்றால் ஊக்கத் தொகை – ஐரோப்பிய நாடு ஒன்றின் புதிய திட்டம்

  • May 3, 2023
  • 0 Comments

பெல்ஜியம் நாட்டில் சைக்கிளில் வேலைக்குச் செல்வோருக்கு ஊக்கத் தொகை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாம் திகதியில் இருந்து இந்த நடவடிககை நடப்புக்கு வந்துள்ளதாக செய்தி வெளியாகியு்ளளது. தனியார் நிறுவனங்களும், தொழிற் சங்கங்களும் ஜனவரியில் ஓர் உடன்பாடு செய்துகொண்டன. அதன் ஓர் அங்கமாக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சைக்கிளில் வேலை இடத்துக்குச் செல்லும்போது ஒரு கிலோமீட்டருக்கு 0.30 டொல் வழங்கப்படும். அதற்கு வரி விதிக்கப்படாது. ஒரு நாளில் 40 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் செல்லலாம். மாதச் சம்பளத்துடன் அந்த ஊக்கத் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிய அறிமுகமாகியுள்ள புதிய தொழில்நுட்பம்!

  • May 3, 2023
  • 0 Comments

மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளைக் கண்டறியும் வகையில், தொழில்நுட்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெஷின் லேர்னிங் (Machine Learning) சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை IIT (Indian Institute of Technology) விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது. மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளை துல்லியமாகக் கண்டறிவதற்கான Machine Learning சார்ந்த அடிப்படையிலான கணினி தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ‘GBM Driver’ (GlioBlastoma Multiforme Drivers) என அழைக்கப்படும் இந்தக் கருவி […]