தேவாரம்
திருஞானசம்பந்தர்
82) திருஅவள் இவள்நல்லூர் – திருவிராகம் – சாதாரி
3679) கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி,
தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி,
கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக,
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.1உரை
இறைவர் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலை அணிந்தவர்.
முப்புரிநூல் அணிந்த திருமார்பினர். திருவெண்ணீறு பூசியவர். இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவர்.
ஆகாயத்தில் திரிந்த பொன், வெள்ளி, இரும்பு ஆகிய கோட்டைகளின் மதில்களை, மேருமலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்து எரித்தவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம் திரு அவளிவணல்லூர் ஆகும்.
திருச்சிற்றம்பலம்.
(Visited 11 times, 1 visits today)