ஆசியா

22 வயது மாணவனை திருமணம் செய்து கொண்ட 48 வயது ஆசிரியை!

  • May 13, 2023
  • 0 Comments

மலேசியாவில் 48 வயது ஆசிரியை ஒருவரை 22 வயதான மாணவன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மலேசியாவின் பெல்டா ஏர் டவார் பகுதியை சேர்ந்தவர் முகமது டேனியல் அகமது அலி(22).2016ம் ஆண்டு உயர்கல்வி பயின்ற போது மலாய் பாடம் நடத்திய ஆசிரியர் ஜமிலா. ஜமிலாவின் குணமும், மாணவர்களுக்கு கனிவுடன் சொல்லிக்கொடுக்கும் விதமும் முகமது டேனியலை கவர்ந்துள்ளது.எனினும் ஜமிலா மீது மரியாதை கலந்த அன்பு மட்டுமே இருந்தது, பல ஆண்டுகளுக்கு தொடர்பு இல்லாமல் போகவே ஒருநாள் ஏதேச்சையாக […]

இலங்கை

ஒரு தலை காதலால் வந்த வினை : ஒரு பிள்ளையின் தாயிற்கு நேர்ந்தக் கதி!

  • May 13, 2023
  • 0 Comments

வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண் உட்பட இருவரது சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 26 வயதுடைய நியூட்டன் தர்சினி  பிள்ளையின் தாயும், 24 வயதுடைய சிவபாலன் சுஜாந்தன் என்ற இளைஞரும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில்,  விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,  குறித்த பெண் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளில், குறித்த 24 வயதுடைய இளைஞர் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், குறித்த பெண் திருமணம் முடித்தும், அவர் தொடர்ச்சியாக […]

வட அமெரிக்கா

வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிய அமெரிக்கா

  • May 13, 2023
  • 0 Comments

உலகை அச்சுறுத்திவந்த கொரோனா வைரஸ் தற்போது தடுப்பூசிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் மூலம் கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் பல்வேறு நாடுகள், வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்து இருந்தன. மேலும், கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும், உலக நாடுகள் விதித்திருந்த கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. இந்த நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை […]

ஐரோப்பா

தேம்ஸ் நதியில் சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட லண்டன் பெண்

  • May 13, 2023
  • 0 Comments

கிழக்கு லண்டனில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தேம்ஸ் நதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30ம் திகதி சுமா பேகம் என்ற 24 வயது பெண் மாயமானதாக கூறி பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதற்கட்ட விசாரணையில் அவரது கணவரே கொலை செய்து சடலத்தை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து லியா ஆற்றில் வீசியதாக தெரியவந்தது. இதனையடுத்து பொலிஸார் மற்றும் நிபுணர்கள் குழு, ஆற்றில் சடலத்தை தேடும் பணிகளை துவங்கினர். இந்த நிலையில், […]

இந்தியா

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் : முன்னிலையில் காங்கிரஸ் கட்சி!

  • May 13, 2023
  • 0 Comments

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி – 120, பாஜக – 73,  மஜத – 25,  மற்றவை- 6 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன. ஷிக்கான் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலை வகித்து வருகிறார். வருணா தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா முன்னிலையில் இருக்கிறார். கனகபுரா […]

இலங்கை

சூடானில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை நிறைவு செய்த சவுதி அரேபியா!

  • May 13, 2023
  • 0 Comments

சவூதி அரேபிய இராச்சியமானது தனது குடிமக்கள் மற்றும் சகோதர மற்றும் நட்பு நாடுகளின் பிரஜைகளை சூடானிலிருந்து வெளியேற்றும் அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளையும் நிறைவு செய்துள்ளதாக இலங்கைக் குடியரசிற்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்தார். இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசர் ஆகியோரின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகள் சவூதி அரேபியாவிடம் முன்வைத்த வேண்டுதல்களுக்கு இணங்கவும் இவ்வெளியேற்ற நடவடிக்கை […]

மத்திய கிழக்கு

24 வார சம்பளம் போனஸ்; மகிழ்ச்சியில் உச்சத்தில் எமிரேட்ஸ் ஊழியர்கள்

  • May 13, 2023
  • 0 Comments

கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் 24 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துபாயை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த நிதியாண்டில் நான்கரை கோடி பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு அந்நிறுவனம் 29 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளது. எனவே வரலாறு காணாத உச்சத்தை கொண்டாடும் விதமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஐந்தரை மாத சம்பளத்தை எமிரேட்ஸ் […]

இலங்கை

கம்பளையில் கொலைசெய்யப்பட்ட 22 வயதான யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!

  • May 13, 2023
  • 0 Comments

கம்பளையில் காணாமல்போன  22 வயதாக யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பாத்திமா முனவ்வரா என்ற யுவதி காணாமல்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,   குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அத்துடன்  இது தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அளித்த  வாக்குமூலத்தில் குறித்த யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் அடையாளம் காட்டிய இடத்தில் கம்பளை நீதவான் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

பிரான்ஸின் 19 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • May 13, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாவனை தொடர்பான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி காரணமாக பிரான்ஸின் இந்த பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. l’Aude, l’Hérault, Gard, Bouches-du-Rhône, Var Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Vaucluse, Drôme l’Ardèche, l’Ain, Haute-Saône, Loiret, Seine-et-Marne, Yvelines, l’Oise, Vienne, Deux-Sèvres. ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விளையாட்டு திடல்கள், வாகனங்கள் கழுவும் இடம் மற்றும் நீச்சல் […]

பொழுதுபோக்கு

படப்பிடிப்பின் போது மரணத்தின் எல்லைக்கு சென்று திரும்பிய பிரபல நடிகையும், நடிகரும்…

  • May 13, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்தார். இந்த படத்தில் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக காவ்யா தாப்பர் நடித்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு மலேசியாவில் நடந்த போது விபத்து ஏற்பட்டதாகவும் அதில் நடிகர் விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அப்போது தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் நடிகை காவ்யா தாப்பர் மலேசியாவில் நடந்த பிச்கைக்காரன் -2 படப்பிடிப்பில் படுகாயம் அடைந்ததாக கூறியுள்ளார். அப்போது நடந்த திகில் அனுபவத்தை […]