ஜெர்மனியில் விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்
ஜெர்மனியில் விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நேட்டோ நாடுகளது விமானப் படைகள் பங்குபற்றவுள்ள பெருமெடுப்பிலான ஆகாயப் போர்ப் பயிற்சி அடுத்த மாதம் 12 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. பல்வேறு விதமான சுமார் 220 போர் விமானங்களும் பத்தாயிரம் படை வீரர்களும் பங்கேற்கின்ற இந்தப் பயிற்சிக்காக ஜெர்மனியின் வான் பரப்பில் அரைவாசி மூடப்படவுள்ளது. இதனால் அந்த நாட்களில் பயணிகள் விமான சேவைகளில் தாமதங்கள், இடையூறுகள் ஏற்படலாம் என்று […]













