ஐரோப்பா செய்தி

புவி வெப்பமயமாதலை விட அணு வெப்பமயமாதலே தற்போதுள்ள பிரச்சினை – ட்ரம்ப் கருத்து!

  • April 16, 2023
  • 0 Comments

புவி வெப்பமயமாதல் பிரச்சினையை விட அணு வெப்பமயமாதல் பிரச்சினைதான் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், அணுசக்தி பற்றி யாரும் பேசுவதில்லை. உலகம் முழுவதும் நமக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை புவி வெப்பமடைதல் அல்ல. அணு வெப்பமயமாதல். இவ்வாறன ஒரு நிகழ்வு நடக்க 200 முதல் 300 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவால் தலைதுண்டிக்கப்பட்ட உக்ரைன் வீரரின் காணொளி வெளியீடு :சர்வதேச விசாரணைக்க அழைப்பு!

  • April 16, 2023
  • 0 Comments

ரஷ்யாவால் தலைதுண்டிக்கப்பட்ட உக்ரைன் வீரரின் காணொளி வெளியீடு :சர்வதேச விசாரணைக்க அழைப்பு! ரஷ்ய துருப்புகளிடம் சிக்கிய உக்ரைனின் சிப்பாய் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் ரஷ்யா போர் குற்றம் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் பயங்கரமான காட்சிகளால் திகைத்துப்போயுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இந்த குற்றத்தை விசாரணை செய்ய வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் […]

ஐரோப்பா செய்தி

கஜகஸ்தான் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவிய புடின்!

  • April 16, 2023
  • 0 Comments

கஜகஸ்தானில் உள்ள துப்பாக்கிச் சூடு வரம்பில் உள்ள இலக்கை, ரஷ்யா புதிதாக ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்கியது. அமெரிக்காவும், ரஷ்யாவும் அணுசக்தி கையிருப்புகளை மட்டுப்படுத்த ஒப்புக்கொண்டன. ஆனால், அமெரிக்காவுடனான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் ரஷ்யா பங்கேற்பதை நிறுத்தியது.இந்த நிலையில் அண்டை நாடான கஜகஸ்தானில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை ரஷ்யா ஏவியுள்ளது. அஸ்ட்ராகான் பகுதியில் உள்ள கப்யுஸ்ட்ரின் யர் சோதனை தளத்தில் இருந்து ரஷ்யா ஏவிய ஏவுகணை, கஜகஸ்தானின் […]

ஐரோப்பா செய்தி

24 மணி நேரத்தில் 72 தாக்குதல்களை முறியடித்த உக்ரைன்!

  • April 16, 2023
  • 0 Comments

கடந்த 24 மணி நேரங்களில்  72 ரஷ்ய தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது உக்ரைனின் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி,  ரஷ்யப் படைகள் நாட்டின் சில பகுதிகளில் ஒரு ஏவுகணை மற்றும் 21 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும்,  உக்ரேனிய துருப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இலக்குகள் மீது 33 ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் லைமன், பாக்முட்,  அவ்திவ் மற்றும் மரின் பகுதிகளில் ரஷ்ய துருப்புக்கள் கவனம் செலுத்துகின்றன குறித்த பிரிவு […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவுடன் புதிய எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஹங்கேரி!

  • April 16, 2023
  • 0 Comments

ஹங்கேரி, ரஷ்யாவுடன் எரிசக்தி ஆற்றலை உறுதி செய்யும் வகையில், ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. ஹங்கேரிய வெளியுறவு மந்திரி Peter Szijjarto மாஸ்கோவில் நடந்த செய்தி மாநாட்டில், ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான எரிவாயு நிறுவனமான Gazprom, கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத் திருத்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட தொகைக்கு அப்பால் ஹங்கேரி எரிவாயுவை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். ரஷய் – உக்ரைனுக்கு இடையிலான போருக்குப்பின் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், ரஷ்ய எரிசக்தி விநியோகத்தில் தங்கியிருப்பதைக் குறைத்துள்ளன. […]

ஐரோப்பா செய்தி

கழிவறை கிண்ணங்களை கூட விட்டு வைக்காத ரஷ்யப்படை; உக்ரைன் பெண் மந்திரி குற்றச்சாட்டு

  • April 16, 2023
  • 0 Comments

பலரின் உயிரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன. எனினும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் பலனற்று காணப்படுகின்றன. இந்த நிலையில், உக்ரைனின் முதல் வெளியுறவு துறை துணை மந்திரியான எமின் தபரோவா நான்கு நாள் பயணமாக கடந்த 10ம் திகதி  இந்தியாவுக்கு வருகை தந்து உள்ளார். இந்தியாவுக்கு வருகை […]

ஐரோப்பா செய்தி

கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை…

  • April 16, 2023
  • 0 Comments

பிரித்தானிய பாஸ்போர்ட் அலுவலக அலுவலர்கள், ஐந்து வார வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், அதைப் பயன்படுத்திக்கொண்டு சில மோசடியாளர்கள் மக்களை ஏமாற்ற முயல்வதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர். தற்போதைய சூழலில், பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு 10 வாரங்கள் ஆகும். அதாவது, இன்று நீங்கள் பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பித்தால், ஜூன் இறுதியில் உங்கள் பாஸ்போர்ட் உங்களை வந்து சேரலாம்.இந்நிலையில், பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி மோசடியாளர்கள் மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள்.விரைவாக பாஸ்போர்ட் புதுப்பிக்க […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் சிறுமிக்கு நேர்ந்த கதி – குழப்பத்தில் பொலிஸார்

  • April 16, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிறுவன் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதுடன் பொலிஸார் குழப்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தெற்கு ஜெர்மனியின் நகரமான பண்சய்ட் என்ற நகரத்தில் உள்ள சிறுவர்கள் இளைஞர் பராமரிப்பு அலுவலகத்தினால் நடாத்தப்படுகின்ற  பராமரிப்பு நிலையத்தில் 10 வயது சிறுமி ஒருவரின் இறந்த உடல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இவேளையில் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட 11 வயது சிறுவன் ஒருவரை தற்பொழுது பொலிஸார் இனங்கண்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இந்நிலையில் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டவர்கள் – தடுக்கும் முயற்சியில் அரசாங்கம்

  • April 16, 2023
  • 0 Comments

தற்பொழுது அகதிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஜெர்மனி அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பெருகி வரும் அகதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில் பல நகரங்கள்  மத்திய அரசாங்கத்திடம்  நிதி உதவியை கோரியுள்ளன. இதேவேளையில் ஜெர்மனியின் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லின் அவர்கள் மற்றும் மத்திய உள்நாட்டு அமைச்சர் நான்ஸி பெசர் அவர்கள் இந்த வேண்டுதலுக்கு செவிசாய்க்காமல் அவர்கள் இதனை நிராகரித்துள்ளார்கள். கடந்த ஆண்டு மட்டும் ஜெர்மனியின் மத்திய அரசாங்கமானது அகதிகளை பராமரிப்பதற்கான 4.4 பில்லியன் யுரோக்களை செலவிட்டுள்ள […]

ஐரோப்பா செய்தி

உணவில் நோயை உண்டாக்கும் வேதிப்பொருள் – ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை

  • April 16, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் பியர் மற்றும் மாமிசத்தில் புற்று நோயை உண்டாக்கும் வேதிப்பொருள் உள்ளதாக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வில் கண்டறிந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் பியர் ஆகியவற்றில் நைட்ரோசமைன்ஸ் என்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனம் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நைட்ரோசமைன்ஸ் நுரையீரல், மூளை, கல்லீரல், சிறுநீரகம், தொண்டை மற்றும் வயிற்றுப் புற்றுநோயை உண்டாக்கும் அபாயகரமான இரசாயனமாகும். ஐரோப்பாவில்  உள்ள அனைத்து வயதினருக்கும், உடலில் நைட்ரோசமைன்கள் வெளிப்படும் அளவு கவலையை எழுப்புகிறது என்று  […]